கோவை : சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்!

Published On:

| By Kavi

கோவை வால்பாறை அருகே ஆற்றில் மூழ்கி 5 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கோவை அருகே சோலையாறு சுங்கம் ஆற்றுக்கு, கோவை கிணத்துக்கடவைச் சேர்ந்த 10 கல்லூரி மாணவர்கள் குளிக்கச் சென்றிருக்கின்றனர்.  இதில் சில மாணவர்கள் ஆற்றில் ஆழம் அதிகமுள்ள பகுதிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் 5 மாணவர்கள் நீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர்.

இதைக் கண்ட சக மாணவர்கள் பதறியடித்து வால்பாறை தீயணைப்பு மற்றும் மீட்புப்படைத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி மீட்புப் பணியில் ஈடுபட்டனர். எனினும் 5 மாணவர்களும் உயிருடன் மீட்கப்படவில்லை. அவர்களது உடலை மீட்ட காவல்துறை பிரேதப் பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்துக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மாணவர்கள் நபில், வினித் குமார், தனுஷ், அஜய், சரத் என்பது தெரியவந்துள்ளது.

மகிழ்ச்சியாக இருப்பதற்காகச் சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள் உயிரிழந்திருப்பது வால்பாறைக்குச் சென்ற சுற்றுலா பயணிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

நாளை முதல் வரும் செவ்வாய் வரை  ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு 4 நாட்கள் தொடர் விடுமுறை ஆகும். இதனால் சுற்றுலா தலங்களில் அதிகளவு மக்கள் குவிவார்கள். எனவே, சுற்றுலா செல்லும் மக்கள்  நீர்நிலைகள் உள்ளிட்ட இடங்களில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்று மீட்புப்படையினர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரியா

முதல் நாள் வசூலைக் குவித்த லியோ: எவ்வளவு தெரியுமா?

சித்தர் முறைப்படி பங்காரு அடிகளார் உடல் அடக்கம்!

ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share