தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் மேலூர் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
மேலூர் வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

மேலூர் தொகுதி 1977-ல் இருந்தே காங்கிரஸ், அதிமுக ஜெயிச்சுகிட்டு இருக்கிற தொகுதி.
2001-ல் இருந்து அதிமுக தொடர்ந்து ஜெயிச்சுகிட்டு இருக்கு.
திமுக கூட்டணியில காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட இந்த தொகுதிக்கான வேட்பாளர் கடைசி நிமிஷம் வரை யாருன்னு பரபரப்பாக இருந்துச்சு.. கடைசியில காஞ்சிபுரம் முன்னாள் எம்பி விஸ்வநாதனை மேலூர் தொகுதி வேட்பாளரா நிறுத்தி இருக்காங்க.
அதிமுக வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ.வான பெரியபுள்ளான் என்ற செல்வம் நிறுத்தப்பட்டிருக்கிறார். 2016, 2021-ல் ஜெயிச்சவரு பெரியபுள்ளான்.
நமது சர்வே முடிவுபடி,
திமுக கூட்டணி- 34%
அதிமுக கூட்டணி-39%
தவெக-17%
நாதக- 9% வாக்குகள் பெறும்
கடுமையான போட்டி இருந்தாலும் அதிமுக முன்னணியில் இருக்கிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்









