மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) கீழ் இயங்கும் தேசிய இ-ஆளுமைப் பிரிவு (National e-Governance Division – NeGD) தங்களது ‘நான்-டெக்னிக்கல் கோடைக்கால இன்டர்ன்ஷிப் 2026’ (Summer Internship Programme) அதிரடி மெகா அறிவிப்பைத் தட்டி விட்டுருக்கு! மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் (DIC) அமைப்பின் கீழ் இயங்கும் நெக்ட் (NeGD) பிரிவு, நாட்டின் பல்வேறு இ-கவர்னன்ஸ் மற்றும் டிஜிட்டல் கொள்கை சார்ந்த பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் நோக்கில் இந்த நான்-டெக்னிக்கல் சம்மர் இன்டர்ன்ஷிப் 2026 திட்டத்திற்கான ஆன்லைன் பதிவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
எந்தெந்தப் பிரிவுகளில் ஜாக்பாட்?
- புரோகிராம் மேனேஜ்மென்ட் (Programme Management): 5 இடங்கள்.
- அவேர்னஸ் & கம்யூனிகேஷன் (Awareness & Communication): 2 இடங்கள்.
- கேபாசிட்டி பில்டிங் (Capacity Building): 2 இடங்கள்.
- டெக்னாலஜி மேனேஜ்மென்ட் (Technology Management): 2 இடங்கள்.
- புரோஜெக்ட் அப்ரைசல் (Project Appraisal): 1 இடம்.
டூரேஷன் மற்றும் சலுகைகள்: இந்த இன்டர்ன்ஷிப் பயிற்சி வரும் ஜூலை முதல் செப்டம்பர் 2026 வரை (3 மாதங்கள்) நடைபெறும்! உங்களது சிறந்த செயல்பாட்டின் அடிப்படையில் மேலும் 3 மாதங்கள் வரை நீட்டிக்கப்படலாம். வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை (Stipend) மற்றும் மத்திய அரசின் பக்கா அங்கீகாரச் சான்றிதழ் (Certificate) நேரடியாக வழங்கப்படும்.
இன்டர்ன்ஷிப்பில் உங்க வேலை என்ன?
மத்திய அரசின் இ-கவர்னன்ஸ் கொள்கை ஆவணமாக்கல் (Policy Documentation) மற்றும் தரவு பகுப்பாய்வு (Data Analytics) பணிகள்.
புதிய தொழில்நுட்பங்களான ஏஐ (AI), பிளாக்செயின், கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் DPDP சட்டத்தின் கீழ் தரவு தனியுரிமை (Data Privacy Research) குறித்த ஆய்வுகள். டிஜிட்டல் இந்தியாவின் முக்கியச் செயலிகளான டிஜிலாக்கர் (DigiLocker), உமாங் (UMANG), போஷன் (Poshan) போன்றவற்றின் திட்ட மேலாண்மை மற்றும் விளம்பரப் பணிகள்.
யாரெல்லாம் தகுதியானவர்கள்?
இந்திய அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் தற்சமயம் இளநிலை (UG) அல்லது முதுநிலை (PG) பட்டப்படிப்புகள் படித்து வரும் தகுதியான மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
என்ஐஆர்எஃப் (NIRF) முன்னுரிமை: இது ரொம்ப முக்கியம் பாஸ்! மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பில் (NIRF) முதல் 100 இடங்களுக்குள் இருக்கும் கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்குத் தேர்வில் கூடுதல் முன்னுரிமை மற்றும் வெயிட்டேஜ் வழங்கப்படும் பாஸ்!
முக்கியத் தேதிகள் மற்றும் தேர்வு முறை
ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: வரும் ஜூன் 7, 2026 (ஞாயிற்றுக்கிழமை).
விண்ணப்பங்கள் சரிபார்ப்பு & நேர்காணல்: விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதி வாய்ந்த மாணவர்களுக்கான நேர்காணல் மற்றும் மதிப்பீடுகள் (Evaluations & Interviews) ஜூன் 3-வது வாரத்தில் நடைபெறும் பாஸ்.
இறுதிப் பட்டியல் வெளியீடு: தேர்வாகும் மாணவர்களின் இறுதிப் பட்டியல் ஜூன் 4-வது வாரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
நேரடி வழிகாட்டுதல்: தேர்வு செய்யப்படும் மாணவர்கள் NeGD-ன் துறைத் தலைவர்களின் (Head of Division – HOD) நேரடி கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலின் கீழ் பணிபுரியும் மாஸ் வாய்ப்பைப் பெறுவார்கள்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
முதலில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான meity.gov.in அல்லது டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் போர்ட்டலான dic.gov.in பக்கத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே ‘Key Offerings’ அல்லது ‘Careers / Openings’ பிரிவிற்குச் செல்லுங்கள். அதில் “NeGD’s Non-Technical (Summer) Internship Programme – 2026″ என்ற லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும்.
விரிவான அறிவிப்பு ஆவணத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் அப்ளிகேஷன் படிவத்தில் (Apply Here Link) உங்களது தனிப்பட்ட விவரங்கள், கல்லூரி விபரங்கள், சிஜிபிஏ (CGPA) மதிப்பெண்கள் மற்றும் உங்களுக்கான விருப்பப் பிரிவைத் (Preferred Area) பிழையின்றி பூர்த்தி செய்ய வேண்டும். உங்களது அண்மைக்கால பயோடேட்டா (Resume) மற்றும் கல்லூரியின் அனுமதிச் சான்றிதழை (Bonafide Certificate) அப்லோட் செய்து அப்ளிகேஷனை சப்மிட் செய்ய வேண்டும்.
இது வெறும் தற்காலிக இன்டர்ன்ஷிப் என்றாலும், மத்திய அமைச்சகத்தின் நேரடித் திட்டங்களில் பணிபுரிந்த அனுபவம், பிற்காலத்தில் நீங்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் அல்லது பெரிய மேலாண்மை (Management) வேலைகளுக்குச் செல்லும்போது உங்களது ரெஸ்யூமிற்கு ஒரு மிகப்பெரிய பலத்தையும், கெத்தையும் கொடுக்கும்!
ஆன்லைன் விண்ணப்பத்தில் உங்களது கல்லூரித் தரவரிசை மற்றும் நீங்கள் கல்லூரி அளவில் செய்த திட்டப் பணிகளை (Projects) மிகத் தெளிவாகக் குறிப்பிடுங்கள், ஏன்னா மதிப்பெண் தகுதி மற்றும் ரெஸ்யூம் அடிப்படையில் தான் நேர்காணலுக்கு ஆட்களைத் தூக்குவாங்க பாஸ். ஜூன் 7-ஆம் தேதியுடன் ஆன்லைன் போர்ட்டல் மூடப்படும். கடைசி நாட்கள்ல அவசரப்படாம, இந்த வாரமே உங்களது ஆன்லைன் விண்ணப்பத்தை கச்சிதமாகத் தட்டி விடுங்க.
மத்திய அரசாங்கத்தோட உயரிய ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டங்கள்ல நேரடியா ஒரு பகுதிப் புள்ளியா இணைந்து செயல்பட, தற்போதைய கல்லூரி மாணவர்களுக்குக் கிடைச்சிருக்கிற ஒரு மிக அருமையான லோக்கல் அண்ட் நேஷனல் ஜாக்க்பாட் வாய்ப்பு இது பாஸ். காலேஜ் படிச்சுட்டு இருக்குற தம்பி, தங்கச்சிகள் இந்த ஜூன் 7 டெட்லைனுக்குள்ள உங்க ஆன்லைன் பதிவை கச்சிதமா முடிச்சிடுங்க. முறையா பிளான் பண்ணி அப்ளை பண்ணuனா, இந்த சம்மர் லீவ்ல நீங்களும் ஒரு கெத்தான மத்திய அரசு இன்டர்னாக மாறி உங்க கரியரை மாஸா தொடங்கலாம்.










