”நாகரிகமாக பயணிக்கணும்” : எம்.எல்.ஏ பல்லவிக்கு மேயர் பிரியா பதில்!

Published On:

| By Kavi

இன்று சென்னை புளியந்தோப்பு , திரு.வி.க நகர் பகுதியில்  உள்ள பள்ளிகளில் நடந்த நிகழ்ச்சியின் போது, மேயர் பிரியா, தவெக எம்.எல்.ஏ பல்லவி ஆகியோருக்கு இடையே விளக்கு ஏற்றுவதில் மோதல் போக்கு ஏற்பட்டது. 

இதுதொடர்பாக எம்.எல்.ஏ பல்லவி கூறுகையில்,  ”இன்னும் அவர்களுடைய ஆதிக்கத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். எங்களை வேலை செய்ய விடுவதில்லை. குத்துவிளக்கை ஏற்றுவதை பொறுத்தவரை மேயருக்கு பிறகு சட்டமன்ற உறுப்பினர்தான் ஏற்றவேண்டும். அதுதான் ப்ரோட்டோகால். ஆனால் மேயர் பிரியா படித்த ப்ரோட்டோகால் எப்படி என்று எனக்குத் தெரியவில்லை” என்று கூறியிருந்தார். 

ADVERTISEMENT

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மேயர் பிரியாவிடம், கைக்குழந்தையோடு வந்த தன்னை அசிங்கப்படுத்திவிட்டதாக எம்.எல்.ஏ பல்லவி கூறியிருக்கிறாரே என்று கேள்வி எழுப்பப்பட்டது. 

இதற்கு அவர்,  ”அசிங்கமெல்லாம் யாரும் படுத்தலங்க.  இன்னைக்கு ஸ்கூல் ஸ்டார்ட் ஆகுது. எல்லா பசங்களும் விடுமுறை முடிச்சுட்டு இன்னைக்கு ஸ்கூலுக்கு வந்துருக்காங்க. இந்த நிகழ்ச்சிக்காக கார்பரேஷன் சார்பில் அவருக்கு அழைப்பு கொடுத்தோம். 

ADVERTISEMENT

8:45-க்கு ஈவென்ட்  என்று  சொல்லியிருந்தோம்; ஆனால் அவங்க 9:00 மணிக்குத்தான் ஈவென்ட்டுக்கே வந்தாங்க. அவங்க சொல்ற மாதிரி புறக்கணிக்கிறதா இருந்தா, நாங்க 8.30-க்கே எல்லாருமே அங்க போயிருந்தோமே, நாங்க ரிப்பன் கட் பண்ணிட்டு போயிருந்திருக்கலாமே! நாங்க புறக்கணிக்கலையே. ‘வருவாங்க’ அப்படின்னு சொன்னதுனால நாங்க அங்க வெயிட் பண்ணிட்டு இருந்தோம். 

ரிப்பன் கட் பண்ணது கூட… நான் கட் பண்றேன், அதுக்கு முன்னாடி அவங்க வேற சிசர் வாங்கி கட் பன்னிட்டாங்க. அதை நீங்களும் பார்த்திருப்பீங்க. 

ADVERTISEMENT

ப்ரோட்டோகால் படி நான் விளக்கு ஏத்துனேன், அப்புறம் ஐ.ஏ.எஸ் ஏத்துவாங்க, அப்புறம் எம்.எல்.ஏ ஏத்துவாங்க, அதுக்கப்புறம் கவுன்சிலரோ இல்ல சேர்மனோ யார் இருக்காங்களோ அவங்க ஏத்துவாங்க. அந்த ஃபார்மட்லதான் இன்னைக்கு போச்சு. அவங்களை யாரும் ஒரு வார்த்தை கூட அவதூறா பேசல, எதுவுமே பண்ணல; அவங்களா வெளியில போயிட்டாங்க. 

‘பிரச்சனை பண்ணனுமே’ அப்படின்னு பண்றவங்ககிட்ட நம்ம என்ன பண்ண முடியும்?

ப்ரோட்டோகால் படி நாங்க என்ன மரியாதை தரணுமோ, அதை நாங்க கொடுத்தோம். நாகரிகமா எல்லாருமே வந்து இதுல பயணிக்கணும். இது பப்ளிக் சர்வீஸ்” என கூறினார். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share