2009-ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தின் போது 1.50 லட்சம் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவு தினத்தை இன்று மாலை தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் அனுசரிக்க இருக்கிறது.
இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் தமது எக்ஸ் பக்கத்தில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இன்று மே 18-ந் தேதி அனுசரிக்கப்படும்; தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணிக்கு, உயிரிழந்த ஈழத் தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் கடைபிடிக்கப்படும்; அனைத்து மாவட்ட செயலாளர்கள் இதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.