அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தலைமையில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் இன்று ஜூலை 2-ந் தேதி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைக்கின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர். இதுவரை 6 அதிமுக எம்.எல்.ஏக்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இவர்களில் ஏற்கனவே 4 பேர் தவெகவில் இணைந்துவிட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த விராலிமலை சி. விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று தவெகவில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் இணைகின்றனர்.
மாமல்லபுரம் நட்சத்திர விடுதியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் திருச்சி வளர்மதி, திருப்பூர் எம்.எஸ்.எம். ஆனந்தன் மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அவர்களது ஆதரவாளர்கள் என பெருந்திரளாக இன்று தவெகவில் இணைகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மேற்கொண்டனர்.
தவெகவில் இணைவதற்காக இன்று காலை முதலே 100-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் அதிமுக நிர்வாகிகள் மாமல்லபுரத்தில் குவிந்து வருகின்றனர்.
நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்தில் ஒவ்வொரு இருக்கையில் அமரும் நபருக்கு தவெக துண்டு போடப்பட்டுள்ளது; அத்துடன் நொறுக்கு தீனி பை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்குதான் நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் காலை 7 மணிக்கே அதிமுகவினர் இணைப்பு விழா நடைபெறும் அரங்கில் இருக்கைகளில் அமர்ந்துவிட்டனர். முன்னதாக அனைவருக்கும் காலை உணவாக இட்லி, பொங்கல் வழங்கப்பட்டது.
இன்று தவெகவில் இணையும் அதிமுக நிர்வாகிகள்
- சி.விஜயபாஸ்கர்- முன்னாள் அமைச்சர், விராலிமலை
- எம்.ஆர் விஜயபாஸ்கர்- முன்னாள் அமைச்சர், கரூர்
- எஸ். வளர்மதி – முன்னாள் அமைச்சர், திருச்சி
- எம்.எஸ்.எம். அனந்தன் – முன்னாள் அமைச்சர், திருப்பூர்
- பி.கே. வைரமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ – புதுக்கோட்டை
- இளம்பை தமிழ்ச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ – பெரம்பலூர்
- ஒரத்தநாடு மா. சேகர் – தஞ்சாவூர்
- சீனிவாசன் – முன்னாள் துணை மேயர், திருச்சி
- மான்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ – ஸ்ரீவில்லிபுத்தூர்
- ஆ. ராம்குமார், முன்னாள் எம்.எல்.ஏ – கும்பகோணம்
- ராஜவர்மன், முன்னாள் எம்.எல்.ஏ – திருச்சுழி
- சதன் பிரபாகர், முன்னாள் எம்.எல்.ஏ – பரமக்குடி
- திருஞானசம்பந்தம், முன்னாள் எம்.எல்.ஏ – பேராவூரணி
- ப. கருப்பையா – திருச்சி நாடாளுமன்றத் தொகுதி, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர்
- தர்ம தங்கவேல் – ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி, மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர்
- ராஜசேகர் – திருச்சி கிழக்கு தொகுதி
- வேலுமணி – தென் நகர் வடக்கு பகுதி செயலாளர் (சென்னை)
- ஆர். ராணி – விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி, மாநில மகளிரணி துணைச் செயலாளர்
- டாக்டர் இராமசாமி – மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர்
- எம்.டி.ஆர். தமிழரசன் – மாநில எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச் செயலாளர்
- பாறை சிவா – மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர்
- பி. காமராஜ் – மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர்
- வழக்கறிஞர் ராஜராஜன் – மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர்
- சு. சந்திரன் – மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர்
- சு. சிவக்குமார் – மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர்
- அ. சுப்பையா (எ) இளவரசன் – மாநில விவசாயப் பிரிவு துணைச் செயலாளர்
- மதுரை கார்த்திக் – மாநில இளைஞரணி துணைச் செயலாளர்
- ஆவின் செல்வம் – மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர்
- வழக்கறிஞர் கதிர் – மாநில வர்த்தக அணி துணைத் தலைவர்
- தென்சென்னை ராமலிங்கம் – மாநில இளைஞரணி துணைச் செயலாளர்
- டி. டில்லி பாபு – மாநில கலைப்பிரிவு இணைச் செயலாளர்
- ஏ.வி.பி. லண்டன் அசோக் – அயலக அணி பொறுப்பாளர்
- கவிதா சசிக்குமார் – முன்னாள் சேர்மன், இராமநாதபுரம்
- எஸ்.எம். சுந்தரராஜன் – மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர்
- எஸ்.எஸ்.ஆர். சத்யா – மாநில இளைஞரணி துணைச் செயலாளர்
- சு. ராஜேஷ் – மாவட்ட மாணவரணி துணைத் தலைவர், காஞ்சிபுரம் மாவட்டம்
- நடிகர் சுஜன் சந்துரு
- மேலூர் அருண்
- ராமமூர்த்தி – மாநகராட்சி கவுன்சிலர், திருச்சி
- என். முத்தமிழ்ச்செல்வன் – அன்னவாசல் கிழக்கு, ஒன்றிய செயலாளர்
- சு. சுப்பையா – அன்னவாசல் மேற்கு, ஒன்றிய செயலாளர்
- அ.வே. ராஜேந்திரன் – விராலிமலை வடக்கு, ஒன்றிய செயலாளர்
- ஆ. திருமூர்த்தி – விராலிமலை கிழக்கு, ஒன்றிய செயலாளர்
- எஸ். பழனியாண்டி – விராலிமலை மேற்கு, ஒன்றிய செயலாளர்
- எஸ். நாகராஜன் – விராலிமலை தெற்கு, ஒன்றிய செயலாளர்
- ஆ. இராமநாதன் – குன்றாண்டார்கோவில் மேற்கு, ஒன்றிய செயலாளர்
- கே. பாலு (எ) பால்ராஜ் – குன்றாண்டார்கோவில் கிழக்கு,
- பி. பாண்டியன் – கந்தர்வக்கோட்டை மேற்கு, ஒன்றிய செயலாளர்
- பி.எம்.எஸ். முத்துக்குமார் – அன்னவாசல் வடக்கு, ஒன்றிய செயலாளர்
- கே. கணேசன் – கரம்பக்குடி வடக்கு.ஒன்றிய செயலாளர்
