தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் மாதவரம் சட்டசபை தொகுதியை கைப்பற்றப் போவது யார்? என பார்க்கலாம்
வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2001 சட்டசபை தேர்தல் முடிவு

2004 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

மாதவரம் தொகுதி… திமுகவில் போட்டியிடும் சிட்டிங் எம்.எல்.ஏ. சுதர்சனம், அதிமுகவில் போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ. மாதவரம் மூர்த்தி இருவரும் வலிமையான வேட்பாளர்கள்தான்.. 2011-ல் அதிமுகவின் மூர்த்தி எம்.எல்.ஏ.வாக இருந்தார். 2016, 2021-ல் திமுகவின் சுதர்சனம் எம்.எல்.ஏ. இப்ப கள நிலவரம், திமுகவுக்கே நல்ல லீடிங்கை கொடுத்திருக்குன்னு சொல்லலாம்.
நமது சர்வே முடிவுபடி,
திமுக கூட்டணி- 43%
அதிமுக கூட்டணி – 23%
தவெக- 24%
நாதக- 9 % வாக்குகள் பெறும்
திமுக வேட்பாளர் சிட்டிங் எம்.எல்.ஏ. சுதர்சனம் வெற்றி பெறுவார் என கள நிலவரம் கூறுகிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
