டாக்டர் ராமதாஸுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

Published On:

| By Aara

பாமக நிறுவனரும் இந்தியாவின் மூத்த அரசியல் தலைவருமான டாக்டர் ராமதாஸ், இன்று (ஜூலை 25) தனது 86 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இதை ஒட்டி அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

மருத்துவர் ராமதாஸ் கல்வி அறக்கட்டளை சார்பில் திண்டிவனம் அருகே ஓலக்கூரில் உள்ள சரசுவதி கல்விக்கோயில் வளாகத்தில் நிறுவனர் நாள் விழா, மரக் கன்றுகள் நடும் விழா, வாழ்த்துப் பாவரங்கம் என நடைபெறும் முப்பெரும் விழா இன்று காலை தொடங்கி நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு மரக் கன்று நடும் நிகழ்வை தொடங்கி வைத்தார் டாக்டர் ராமதாஸ். பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் 86 மரங்கள் நடப்பட்டன.

“இந்த மரங்கள் எல்லாம் இன்னும் 15 வருடங்களில் பணமாக காய்க்கும். சென்ற ஆண்டு ஆகஸ்டு, அக்டோபர், நவம்பர் மாதங்களில் 7770 பணங்காய்க்கும் 16 வகையான மரங்களை நட்டிருக்கிறோம். இந்த வளாகத்திலே இருக்கும் மரம், செடி,. கொடிகளை காண இரு கண்கள் போதாது. மரம் நடும் அறமே சிறந்த அறம். இதைத் தொடர்ந்து செய்து வருகிறோம்”  என்று தெரிவித்த டாக்டர் ராமதாஸ், தனக்கு வாழ்த்து சொன்ன ஊடகத்தினருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இதற்கிடையே தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக தளப் பக்கத்தில் டாக்டர் ராமதாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஐயா அவர்களின் பிறந்தநாளில், அவர் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன்” என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

வேந்தன்

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு : ஏன்?

முடங்கிய விண்டோஸ்… அன்றே கணித்தாரா கபிலன் வைரமுத்து?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share