நடிகை நமீதா, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அதிமுக-வில் தன்னை சேர்த்துக் கொள்ளுமாறு ஜெயலலிதாவுக்கு நமீதா வேண்டுகோள் விடுத்துள்ளார். நமீதா எழுதியுள்ள கடிதத்தில், ‘நமீதா ஆகிய நான், தமிழ் திரைத்துறையில் நடிகையாக உள்ளேன். தங்களது சீர்மிகு நிர்வாகமும், ஆட்சிமுறையும் தமிழகத்தை இந்தியாவின் சிறந்த மாநிலமாகத் திகழ வைத்துள்ளது. சிறந்த தலைவியாகத் திகழும் தங்கள் தலைமையில் நானும் இணைந்து என்னாலான பங்களிப்பைத் தர விரும்புகிறேன். தங்கள் தலைமையில் அஇஅதிமுக-வில் அடிப்படை உறுப்பினராக என்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். நமீதாவுக்கு சில வருடங்களாகவே திரைப்பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. அதனால், சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக இருப்பது, சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வது என ‘மீடியா’ வெளிச்சம் குறையாமல் பார்த்துக்கொண்டார். அதிகமான உடல் எடை, வசீகரத் தோற்றத்தை இழந்ததால்தான் நமீதாவுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை என பேசப்பட்டது. சில வாரங்களுக்கு முன்னர், எடையளவைக் குறைத்து ‘ரீ-என்ட்ரி’க்குத் தயாரானார். ஆனாலும், வாய்ப்புகள் அமையவில்லை. இதனையடுத்து அரசியலில் களமிறங்க முடிவு செய்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு நமீதா கடிதம்
By Balaji
|
Published on 23 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








