ஏப்ரல் 23-ல் ஜெயலலிதா வேட்பு மனுத்தாக்கல்

By Balaji

|

Published on 16 Apr 2016, 12:00 AM

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். தமிழகம் முழுவதும் அதிமுக வேட்பாளர்கள் 227 தொகுதியில் போட்டியிடுகின்றனர். ஆனால், தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில்தான் அதிமுக அணி போட்டியிடுகிறது. இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 23-ம் தேதி ஆர்.கே.நகரில் ஜெயலலிதா வேட்புமனுத்தாக்கல் செய்யவிருப்பதாக அதிமுக வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. மேலும், தமிழகம் முழுவதுமுள்ள அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் ஒரே நாளில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய இருக்கின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel