லைகா-மணிரத்னம்-உதயநிதி: பொன்னியின் செல்வன் பிசினஸ் முடிவதில் சிக்கல்! 

Published On:

| By Aara

செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் தமிழர்கள் பொன்னியின் செல்வன் படத்தைக் காண காத்திருக்கிறார்கள்

லைகா நிறுவனத்தின் முதலீட்டில் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் கொடுக்க லைகா நிறுவனம் முடிவு செய்தது.

ஆனால், அதற்கு மணிரத்னம் ஒப்புக்கொள்ள மறுத்துள்ளார் என்கிறது லைகா வட்டாரம்.  ஆனால் ரெட் ஜெயண்ட் நிறுவனம் பொன்னியின் செல்வன் படத்தை வெளியிட வேண்டாம் என்கிற முடிவில் இருப்பதாக ரெட் ஜெயண்ட் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ADVERTISEMENT

முதல் பிரதி அடிப்படையில் படத்தை தயாரிக்கும் நிறுவனத்தின் வேலை அத்துடன் முடிவுக்கு வந்து விடும்.

ஆனால் பொன்னியின் செல்வன் வியாபார முடிவுகளில் மணிரத்னம் தலையிட என்ன காரணமாக இருக்க முடியும் என்ற கேள்விகளுடன் தமிழ் சினிமா வர்த்தகர்களை தொடர்பு கொண்டோம்.

ADVERTISEMENT

 “இப்படத்தின் இரண்டு பாகங்களையும் மணிரத்னம் எடுத்துக் கொடுத்து விட வேண்டும். அதற்காக  225 கோடி ரூபாயை லைகா நிறுவனம் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துக்கு கொடுத்துவிடவேண்டும் என்பதுதான்  முதலில் போட்டுக் கொண்ட ஒப்பந்தம்.

படம் தாமதமானதால், அந்த 225 கோடிக்கு குறைந்தபட்ச வட்டி போட்டு அதையும் கணக்கில் சேர்க்க வேண்டும்.

பட வியாபாரத்தில் கிடைக்கும் தொகையில் அந்தப் பணத்தை முதலில் எடுத்துக் கொண்டு அதன் பின் வரும் தொகைகளில் லைகாவுக்கு 70% மணிரத்னத்துக்கு 30% என ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. 

லாபத்தில் பங்குதாரர் என்கிற உரிமை இருப்பதால்தான் மணிரத்னம், ரெட் ஜெயண்ட்டுக்குப் படம் கொடுப்பதை எதிர்க்கிறாராம். இதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது.

ரெட்ஜெயண்ட் நிறுவனம் எந்தப் படத்தையும் விலை கொடுத்து வாங்குவதில்லை. அவர்கள் வெளியிடுகிற படங்களை திரையரங்குகளில் வெளியிடுவார்கள்.

வரும் வருமானத்தில் விநியோகஸ்தர் கமிஷன் எடுத்துக் கொண்டு மொத்த வருவாயை தயாரிப்பு நிறுவனத்திடம் கொடுத்துவிடுவார்கள்.

இந்த முறையில் படத்தை வெளியிட்டதால்தான்  விக்ரம் படத்தில் கமல் பலகோடி சம்பாதிக்க முடிந்தது. பொன்னியின் செல்வனை அப்படிக் கொடுத்தால் மணிரத்னத்தின் பங்கு பட வெளியீட்டுக்குப் பின் தான் கிடைக்கும்.

ஒருவேளை படம் சரியாகப் போகவில்லை என்றால் பங்கே இல்லையென்றாகிவிடும்.
அதனால்தான், என் படங்களை இம்மாதிரி விநியோக முறையில் நான் கொடுத்ததே இல்லை.

எம்ஜி அல்லது அவுட்ரேட் முறையில் தான் கொடுப்பேன். அவ்வாறே இந்தப் படத்தையும் விற்பனை செய்து என் பங்கை வெளியீட்டுக்கு முன்பே கொடுத்துவிடுங்கள் என்கிறாராம் மணிரத்னம்.

அவர் சொல்கிற மாதிரி படத்தை வாங்கி வெளியிட இதுவரை யாரும் முன்வரவில்லை என்பதால் இன்னும் முடிவு எட்டப்படாமல் இருக்கிறது” என்கிறார்கள்.

பொன்னி நதி பார்க்கணுமே பொழுதுக்குள்ளே…. மணிரத்னத்துக்கு கோடிகளை  எடுக்கணுமே ரிலீஸுக்குள்ளே…

–இராமானுஜம் 

உண்மையான பான் இந்திய படம் பொன்னியின் செல்வன் : பிரபலங்கள் பேச்சு!

Photo of author
Aara
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share