லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (அக்டோபர் 12) காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையை சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின் லாட்டரி விற்பனை தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில், சென்னை போயஸ் கார்டன் ரங்கன் தெருவில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு, கோவை வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள வீடு மற்றும் கவுண்டம்பாளையத்தில் அவருக்கு சொந்தமான ஹோமியோதி கல்லூரி, போயஸ் கார்டனில் உள்ள மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜூன் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
2009-2010 காலகட்டத்தில் சிக்கிம் மாநில லாட்டரி விதிகளை மீறி மார்ட்டின் ரூ.910 கோடி வருவாய் ஈட்டியதாகவும் அந்த வருவாயை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மாற்றி சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
கடந்த மே மாதம் மார்ட்டினுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி ரூ.457 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
