ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநராக இருந்தவர் ராமேஸ்வர முருகன். இவர் தற்போது ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளராக உள்ளார். குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்.
பள்ளிக் கல்வித்துறை இயக்குநராக இருந்த போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.
அந்த புகார்களின் அடிப்படையில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஈரோட்டில் உள்ள ராமேஸ்வர முருகன் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோலியில் உள்ள அவரது வீட்டில் ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் ரேகா தலைமையில் 6 பேர் கொண்ட குழு சோதனை நடத்தி வருகின்றது.
அதே போன்று ஈரோடு அக்ரஹார வீதியில் உள்ள ராமேஸ்ர முருகனின் மாமனாரான நகைக்கடை உரிமையாளர் அறிவுடைநம்பியின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மோனிஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெச்.ராஜாவுக்கு பை பாஸ் சர்ஜரி!
மணிப்பூர் கலவரத்துக்குக் காரணமான தீர்ப்பும், கொலிஜியத்தின் மறுப்பும்! யார் இந்த நீதிபதி முரளிதரன்?