ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: அன்பில் மகேஷ்

Published On:

| By Selvam

minister anbil mahesh says teachers protest

ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எனது அலுவலக கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கலைஞர் ஆட்சிக்காலத்தில் சென்னையில் கட்டப்பட்ட வள்ளுவர் கோட்டம், செம்மொழி பூங்கா, அண்ணா மேம்பாலம், மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம், அண்ணா நூற்றாண்டு நூலகம், கண்ணகி சிலை ஆகிய இடங்களுக்கு மாணவர்களை அழைத்து செல்லும் திட்டத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (அக்டோபர் 12) துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “அதிமுக ஆட்சிக்காலத்தில் ரூ.4.27 கோடிக்கு நீட், ஜேஇஇ நுழைவு தேர்வு பயிற்சிக்கு தேவையில்லாமல் செலவு செய்ததாக சிஏஜி அறிக்கை கொடுத்துள்ளது. மாணவர்களுக்கு ரூ.3.25 கோடிக்கு புத்தகம் வாங்கி யாருக்கும் வழங்காமல் வீண் செலவு செய்துள்ளனர்” என்றார்.

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “ஆசிரியர் சங்க உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளது. அனைவரும் சேர்ந்து ஒருமித்த கருத்துடன் என்னை சந்திக்க வாருங்கள். ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த நான் இன்று காலை 8.30 மணி வரை எனது அலுவலகத்தில் காத்திருந்தேன். ஆசிரியர்களுக்காக எனது அலுவலக கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்” என்று தெரிவித்தார்.

செல்வம்

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

“லியோ” வெற்றி பெற திருப்பதி சென்ற லோகேஷ்!

திருவள்ளூரில் இரண்டு ரவுடிகள் என்கவுண்டர்!

பிக் பாஸ்: கோல்டன் ஸ்டாரான கூல் சுரேஷ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment