கல்லீரலைச் சுத்தம் செய்கிறேன் என்று டிடாக்ஸ் ஜூஸ் குடிக்கிறீங்களா?

By Minnambalam Desk

|

Published on 19 Nov 2026, 9:42 AM

எடையைக் குறைக்கவும், உடம்பில் சேர்ந்த நச்சுகளை வெளியேற்றவும் டிடாக்ஸ் ஜூஸ் குடிப்பது இப்போது பலரிடம் பிரபலம்.

குறிப்பாக, விருந்தில் அதிகம் சாப்பிட்ட பிறகோ, மது அருந்திய பிறகோ கல்லீரலைச் ‘சுத்தம்’ செய்யலாம் என்று இவற்றைத் தேடுபவர்கள் அதிகம்.

ADVERTISEMENT

ஆனால் இந்த பானங்கள் உண்மையில் கல்லீரலைச் சுத்தம் செய்கின்றனவா? இதற்குப் பின்னால் உள்ள மருத்துவ உண்மை என்ன என்று பார்க்கலாம்.

கல்லீரல் என்ன செய்கிறது?

ADVERTISEMENT

உடம்பில் உள்ள நச்சுப் பொருட்களைச் செயலாக்கி வெளியேற்றும் வேலையைக் கல்லீரல் ஏற்கெனவே செய்துகொண்டிருக்கிறது. செரிமானத்துக்குத் தேவையான பித்தநீரை உருவாக்குவது, மருந்துகளைச் செயலாக்குவது, உடலுக்குத் தேவையான புரதங்களை உற்பத்தி செய்வது என்று பல வேலைகள் அதற்கு உண்டு.

டிடாக்ஸ் பானங்கள் வேலை செய்யுமா?

ADVERTISEMENT

கல்லீரலைச் சுத்தப்படுத்துவதாக விளம்பரம் செய்யப்படும் டிடாக்ஸ் பானங்கள், மாத்திரைகள் உண்மையில் பலன் தருகின்றன என்பதற்குப் போதுமான அறிவியல் ஆதாரம் இல்லை. மஞ்சள், பால் நெருஞ்சில் போன்ற மூலிகைகள் சேர்த்திருந்தாலும், அவை கல்லீரலை முழுமையாகச் சுத்தப்படுத்தும் என்பதற்கும் உறுதியான ஆதாரம் இல்லை.

ஆபத்தும் இருக்கிறதா?

எடை குறைப்புக்கு என்று விற்கப்படும் சில டிடாக்ஸ் பொருட்கள் எதிர்பாராத பக்கவிளைவுகளை உண்டாக்கலாம். குறிப்பாக, சில மூலிகைச் சத்துகள், கட்டுப்பாடு இல்லாத உணவுக் கூடுதல் பொருட்கள் கல்லீரலைப் பாதிக்கவும் கூடும். அதிகமாக மது குடித்துவிட்டு மறுநாள் டிடாக்ஸ் ஜூஸ் குடித்தால், ஏற்கெனவே நடந்த கல்லீரல் பாதிப்பைச் சரிசெய்துவிட முடியாது.

கல்லீரலைக் காக்க என்ன செய்யலாம்?

  • மதுவைத் தவிர்க்கலாம் அல்லது கட்டுப்படுத்தலாம்.
  • உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ளுங்கள்.
  • தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.
  • ஹெபடைடிஸ் தொற்றைத் தவிர்க்க, பாதுகாப்பற்ற உடலுறவு, ஊசி மூலம் போதைப்பொருள் பயன்படுத்துவது ஆகியவற்றிலிருந்து விலகியிருங்கள்.
  • ஹெபடைடிஸ் ஏ, பி தடுப்பூசிகளை மருத்துவர் ஆலோசனையோடு போட்டுக்கொள்ளலாம்.

சிகிச்சைதான் தீர்வு

கல்லீரலில் கொழுப்பு சேர்வது, ஹெபடைடிஸ், சிரோசிஸ் போன்ற பாதிப்புகளுக்கு டிடாக்ஸ் பானங்கள் தீர்வு இல்லை. உடல் பருமனால் கல்லீரலில் கொழுப்பு சேர்ந்திருந்தால், உணவுக் கட்டுப்பாடும் முறையான உடற்பயிற்சியும் மூலம் எடையைக் குறைப்பதுதான் முக்கியம்.

கல்லீரல் பாதிப்புகள் சில நேரம் ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் காட்டாது. அதனால் சந்தேகம் இருந்தால் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். காஸ்ட்லி டிடாக்ஸ் பொருட்களைத் தேடுவதைவிட, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதுதான் கல்லீரலுக்கு நல்லது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel