இந்தியாவில் மேலும் ரூ.65,000 கோடி! சூரிய, காற்றாலை மின்சாரத்தில் அமேசானின் பெரிய பந்தயம்!

By Kavi

|

Published on 19 Nov 2026, 9:27 AM

இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் தன் பிடியை இறுக்க அமேசான் பெரிய முதலீட்டை அறிவித்துள்ளது. 2030-க்குள் இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களில் கூடுதலாக 7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.65,393 கோடி) முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

ஏற்கெனவே 4 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டங்களுக்கு நிறுவனம் ஒப்பந்தம் போட்டிருக்கிறது.

ADVERTISEMENT

நான்கு புதிய திட்டங்கள், 934 மெகாவாட்

கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் மொத்தம் 934 மெகாவாட் திறன் கொண்ட நான்கு சூரிய, காற்றாலை மின் திட்டங்களை அமேசான் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
  • கர்நாடகா: 234 மெகாவாட் காற்றாலைத் திட்டம்.
  • கர்நாடகா: 200 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை – சூரிய மின்சக்தி இணைந்த திட்டம்.
  • மத்தியப் பிரதேசம்: 300 மெகாவாட் சூரிய மின்சக்தித் திட்டம்.
  • ராஜஸ்தான்: 200 மெகாவாட் சூரிய மின்சக்தித் திட்டம்.

இதில் கர்நாடகாவின் 234 மெகாவாட் காற்றாலை, ஆசியாவில் அமேசான் ஒப்பந்தம் போட்டுள்ள மிகப்பெரிய காற்றாலைத் திட்டம் என்று சொல்லப்படுகிறது.

35 லட்சம் குடும்பங்களின் மின்சாரத் தேவை

ADVERTISEMENT

இந்தத் திட்டங்கள் எல்லாம் மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் (PPA) மூலம் உறுதி செய்யப்பட்டவை. அவை செயல்பாட்டுக்கு வந்தால், இந்தியாவில் அமேசானின் ஒப்பந்தப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் 2 ஜிகாவாட்டைத் தாண்டும். இது ஆண்டுக்கு 35 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியக் குடும்பங்களின் மின்சாரத் தேவைக்குச் சமம்.

2040-க்குள் கார்பன் பூஜ்ஜியம்

உலக அளவில் அமேசான் பயன்படுத்தும் மின்சாரத்தின் கார்பன் தீவிரத்தை, 2019-ஐ அடிப்படையாகக் கொண்டு 2030-க்குள் 65 சதவீதம் குறைப்பதாகப் புதிய இலக்கையும் அறிவித்துள்ளது. நிறுவனத்தின் இறுதி இலக்கு, 2040-க்குள் தன் செயல்பாடுகளில் நிகரக் கார்பன் வெளியேற்றத்தைப் பூஜ்ஜியமாக்குவது. இந்த முதலீடு இந்தியாவின் 2070 நிகரப் பூஜ்ஜிய இலக்குக்கும் எரிசக்திப் பாதுகாப்புக்கும் உதவும் என்று மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி வரவேற்றுள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel