LIVE🔴 : சட்டசபை கூட்டத் தொடர் நேரலை.. புதிய மரபு அறிமுகம்.. இருமுறை பாடப்பட்ட தேசிய கீதம்! ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்.. ஜாதிவாரி கணக்கெடுப்பு, இருமொழிக் கொள்கை, மேகதாது அணைக்கு எதிர்ப்பு!

Published On:

| By Mathi

TN Governor Address

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் (Tamil Nadu Assembly Session) இன்று ஜூன்
18-ந் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. சட்டசபை நிகழ்வுகளை நேரலையாக இந்தப் பக்கத்தில் இடம்பெறுகிறது..

ADVERTISEMENT
  • காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டசபை நிகழ்வுகள் முற்பகல் 11.12 மணிக்கு நிறைவடைந்தன.
  • ஆளுநர் உரை முடிவடைந்த பின் மீண்டும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு சபை நடவடிக்கைகள் நிறைவடைந்தன.
  • ஆளுநரின் உரையை தமிழில் வாசித்து நிறைவு செய்தார் சபாநாயகர்.
  • ஆளுநர் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையை தமிழில் வாசிக்கிறார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்.
  • சட்டசபையில் 37 நிமிடங்கள் ஆளுநர் அர்லேகர் உரையாற்றினார்.
  • இந்து சமய அறநிலையத்துறையில் மாற்றம் செய்யப்படும்
  • விளையாட்டுத் துறை மேம்பாடு- ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்
  • அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்புவோம்- போர்க்கால அடிப்படையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.
  • கீழடிக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைக்க நடவடிக்கை எடுப்போம்
  • 2031-ம் ஆண்டுக்குள் தமிழகம் முழுவதும் சிறப்பான உள்கட்டமைப்புகள் அமைக்கப்படும்.
  • முந்தைய அரசின் தொழில் கொள்கைகள் தொடரும் அதே நிலையில் புதிய தொழில் கொள்கை வெளியிடப்படும்
  • அரசு துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் AI பயன்பாடு அமல்படுத்தப்படும்.
  • 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • புதிய தொழிற்சாலைகள் தொடங்க சிங்கிள் விண்டோ சிஸ்டம் அறிமுகப்படுத்தும்
  • மத்திய அரசிடம் இருந்து போதுமான நிதியைப் பெற சட்டப் போராட்டம் நடத்தப்படும்- ஆளுநர் அர்லேகர்
  • முல்லைப் பெரியாறில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும்.
  • நதிநீர் இணைப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.
  • கர்நாடகா மேகதாது அணை கட்டுவதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும்
  • மும்மொழிக் கொள்கையை காரணம்காட்டி மத்திய அரசு நிதி தர மறுப்பது ஏற்புடையது அல்ல- ஆளுநர் அர்லேகர் உரை.
  • மும்மொழிக் கொள்கையை திணிக்கும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு; தமிழ்நாடு இருமொழிக் கொள்கையையே பின்பற்றும்; உயர்நீதிமன்றத்தில் தமிழே வழக்காடு மொழி
  • மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்
  • பயிர் கடன் தள்ளுபடியால் 14 லட்சம் விவசாயிகள் பயனடைகின்றனர்- ஆளுநர் அர்லேகர்
  • 717 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன.
  • ஊழற்ற நிர்வாகம்.. டெண்டர்கள் வெளிப்படையாக மேற்கொள்ளப்படும்
  • கனிமவள முறைகேடுகளைத் தடுக்க அரசு நடவடிக்கை
  • நிதிப் பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது; விரிவான விளக்க அறிக்கை பின்னர் வெளியிடப்படும்- ஆளுநர் அர்லேகர்
  • தமிழகத்தின் தனிநபர் கடன் ரூ1.28 லட்சம்
  • வருவாய் இழப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்
  • மாநில உரிமை- தவெக ஆட்சியின் அடிப்படை கொள்கை
  • பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்
  • முந்தைய அரசு போதை கலாசாரத்தை தடுக்க தவறியது..போதைப் பொருட்கள் கடத்தலைத் தடுக்க சிறப்பு படை அமைக்கப்படும்
  • மதுரை, கோவை, ஓசூர் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி தர வேண்டும்
  • 5 ஆண்டுகளில் 2 மடங்கு கடன் சுமை அதிகரித்துவிட்டது- தமிழகத்தின் கடன் ரூ10 லட்சம் கோடி; வருவாய் பற்றாக்குறை ரூ78,000 கோடி -ஆளுநர் அர்லேகர்
  • மேகதாது, மீனவர் பிரச்சனை குறித்து பிரதமரிடம் முதல்வர் விஜய் மனு அளித்தார்
  • தவெகவின் கொள்கை தலைவர்கள் அனைவரது பெயரையும் குறிப்பிட்டார் ஆளுநர்
  • அண்ணா எம்ஜிஆருக்கு பிறகு தமிழக வரலாற்றில் தற்போது புரட்சி ஏற்பட்டுள்ளது.விசில் புரட்சி மூலம் இமாலய வெற்றி பெற்றுள்ளார் விஜய்- ஆளுநர்மக்கள் நலனுக்காக விவாதங்கள் பேரவையில் நடைபெறும்- ஆளுநர் அர்லேகர் நம்பிக்கை
  • கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் மக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது தவெக- ஆளுநர்
  • ஜாதி-மதம் கடந்து பணம் கொடுக்காமல் தவெகவை மக்கள் தேர்ந்தெடுத்தனர்- ஆளுநர் அர்லேகர்
  • ”மக்களே ஜனநாயகத்தில் உயர்ந்தவர்கள்”.. பேரறிஞர் அண்ணாவின் கருத்தை மேற்கோள் காட்டினார் ஆளுநர். தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வெற்றியை புகழ்ந்தார்.
  • ஆளுநர் அர்லேகர் உரையை வாசித்து வருகிறார்
  • சட்டசபையில் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படுவது வழக்கம் இல்லை. முதல் முறையாக முதலிலேயே தேசிய கீதம் பாடப்பட்டது.
  • தமிழ்த் தாய் வாழ்த்துடன் தேசிய கீதமும் பாடப்பட்டது.
  • தமிழ்த் தாய் வாழ்த்துடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது
  • காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் ஆளுநர் அர்லேகர்.
  • சட்டசபைக்கு ஆளுநர் அர்லேகர் வருகை தந்தார். சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், சபை முன்னவர் கே.ஏ. செங்கோட்டையன், சட்டசபை செயலாளர் வரவேற்றனர்
  • சட்டசபைக்கு முதல்வர் விஜய் வருகை தந்தார்; காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
  • எதிர்க்கட்சி வரிசையில் எடப்பாடி பழனிசாமிக்கு 5-வது இருக்கை ஒதுக்கீடு
  • எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு வருகை
  • ”கதறல் கேட்குதா CM?
    ”தற்குறி ஆட்சி.. தமிழ்நாடே சாட்சி”
    “வாய்ஸ் ஏதாவது வருமா CM?”
    “கதறல் கேட்குதா CM?”
    “வாயில் ஏதாவது வருமா CM?”
    “ரீல்ஸ் இங்கே? ரியல் எங்கே?”
    “மாஸ்டர் வாயில் பிளாஸ்டர்”
    ”திரையில் நாயகன்.. தரையில் வில்லன்”
    ”தூய சக்தி அல்ல துயர சக்தி”
    ஆகிய பதாகைகளை ஏந்தியபடியும்
    ”எங்கே போச்சு? எங்கே போச்சு?
    சட்டம் ஒழுங்கு எங்கே போச்சு”
    ”கண்டிக்கிறோம்.. கண்டிக்கிறோம்
    தமிழக அரசைக் கண்டிக்கிறோம்” என்பது உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பியும் சட்டசபைக்கு வருகை தந்தனர் திமுக எம்.எல்.ஏ.க்கள்.
  • தமிழக அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியபடி திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு வருகை தந்தனர்
  • சட்டசபைக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து வருகை தந்துள்ளனர். அந்த கறுப்பு பேட்ஜில், “வாயை திறங்க CM” என எழுதப்பட்டுள்ளது.
  • சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
  • சட்டசபைக்கு கைக்குழந்தையுடன் வருகை தந்தார் தவெக எம்.எல்.ஏ. பல்லவி
  • முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதலாவது சட்டசபை கூட்டத் தொடரின் ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு இடம் பெறும் என எதிர்பார்ப்பு.
  • ஆளுநர் அர்லேகர் உரையுடன் சட்டசபை கூட்டத் தொடர் தொடங்குகிறது
  • சட்டசபைக்கு எம்.எல்.ஏ.க்கள் வருகை தர தொடங்கினர்
  • 17-வது சட்டசபையின் முதலாவது கூட்டத் தொடர் சற்று நேரத்தில் தொடங்குகிறது
  • தமிழக சட்டசபை காலை 10 மணிக்கு தொடங்குகிறது

சட்டசபை நிகழ்வுகள் நேரலை:

🔴 LIVE : தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடர் - ஆளுநர் உரை
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share