உடல் எடை குறையணுமா?.. இதோ 5 சூப்பர் காலை உணவுகள் லிஸ்ட்!

Published On:

| By Santhosh Raj Saravanan

List of 5 super breakfast for weight loss

‎‎உடல் எடை குறைய முக்கியமான 5 காலை உணவுகளின் பட்டியலை விரிவாகப் ‎பார்க்கலாம்.

‎தற்போதைய வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின்மை, உணவுப் பழக்கம் காரணமாக உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையை நாம் எதிர்கொண்டு வருகிறோம். உடல் எடை அதிகரிப்பு தோற்றத்தில் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்துவது இல்லை, பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளையும் உண்டாக்குகிறது. நம் அனைவருக்குமே உடல் எடையைக் குறைத்து ஃபிட்டாக மாற வேண்டும் என்கிற ஆசை இருக்கும்.  என்னதான் உடற்பயிற்சி செய்தாலும் உணவுக் கட்டுப்பாடு இருந்தால் மட்டுமே உடல் எடைக் குறைப்பு சாத்தியமாகும். நாம் வழக்கமாக சாப்பிடும் இட்லி, தோசையில் மாவுச் சத்து அதிகமாக இருப்பதால் அது உடல் எடை கட்டுப்பாட்டுக்கு வழிவகுக்காது. ஆகவே, நாம் நம்முடைய காலை உணவை (Breakfast for Weight Loss) புரதச் சத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும். காலையில் எளிதாக செய்ய முடிந்த அதிக புரதச்சத்துள்ள உணவுகளை (high protein breakfast) உங்களுக்கு சொல்கிறோம்.

ADVERTISEMENT
‎ஓட்ஸ் உப்மா

‎ஓட்ஸ் என்பது அத்தியாவசிய ஊட்டச் சத்துகள் நிறைந்ததாக உள்ளது. ஓட்ஸ் உப்மாவை நாம் சில நிமிடங்களில் எளிதாக தயாரித்துவிட முடியும். ஓட்ஸ் உப்மா (Oats Upma Recipe)  சுவையானது மட்டுமல்ல, உடல் எடையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. ‎காலையில் எழுந்தவுடன் ஓட்ஸ் கஞ்சி கூட சாப்பிடலாம். இது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தந்து பசி உணர்வைக் கட்டுப்படுத்துகிறது.‎

‎பாசிப்பருப்பு தோசை

‎‎பாசிப் பருப்பு என்பது புரதச் சத்தின் சிறந்த மூலமாக உள்ளது. பாசிப் பருப்பு தோசையில் (‎Moong dal Dosa) நார்ச்சத்து, மாங்கனீசு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனையும் காலையில் எளிதாக தயாரித்துவிட முடியும். சட்னியுடன் பாசிப் பருப்பு தோசை சாப்பிடுவது சுவையானது மட்டுமல்லாமல், உடல் எடையையும் குறைக்க உதவி புரிகிறது. வாரத்தில் 2 நாட்களாவது பாசிப் பருப்பு தோசை சாப்பிடலாம்.

ADVERTISEMENT
‎‎அவல் உப்மா

‎‎‎அவல் ஒரு எளிமையான மற்றும் எளிதில் செரிக்கும்படியான காலை உணவாக உள்ளது. அவல் உப்மா (‎Awal Upma) நீண்ட நேரத்திற்கு உடலின் ஆற்றலைத் தக்க வைத்துக்கொள்ள உதவிபுரிகிறது. வயிறை நீண்ட நேரம் நிரம்பிய உணர்வுடன் ‎வைத்திருப்பதால் எடையை குறைப்பதில் உதவிபுரிகிறது.

‎‎தயிர்

‎தயிரில் ஆரோக்கியமான புரோபயாடிக்குகள் அதிகளவில் உள்ளன. இவை செரிமான அமைப்புகளை ஆரோக்கியமாக பராமரிக்கவும், மேம்படுத்தவும் உதவிபுரிகின்றன. தயிரை பழத்துடன் (‎Yogurt) சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு புரதம் உள்ளிட்ட அத்தியாவசிய வைட்டமின்களை வழங்குகிறது. இவை உடல் எடையைக் குறைக்கவும் உதவுகின்றன.

ADVERTISEMENT
‎‎காய்கறி சாண்ட்விச்

‎‎பிரெட் மற்றும் காய்கறிகளைக் கொண்டு காய்கறி சாண்ட்விச்சை (Vegetable Sandwich) நாம் தயாரித்துவிடலாம். இது சத்தானதோடு குறைந்த கலோரி கொண்ட காலை உணவாகவும் உள்ளது. இதில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் சிறிதளவு கூட பயன்படுத்துவதால் உடல் எடைக் குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த காலை உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதோடு, உடற்பயிற்சியும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தால் சில வாரங்களில் உடல் எடை குறைவது காண முடியும்.

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share