கொடைக்கானல் டூ சென்னை: ஸ்டாலின் ரிட்டர்ன்ஸ்!

Published On:

| By Selvam

கொடைக்கானலுக்கு ஓய்வெடுக்க சென்ற முதல்வர் ஸ்டாலின் இன்று (மே 3) தனது பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார்.

தமிழகத்தில் ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து திமுக கூட்டணி கட்சி தலைவர்கள், சீனியர் அமைச்சர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.

அப்போது ஒவ்வொரு தொகுதி நிலவரம் பற்றியும் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்கிற விவரங்கள் பற்றியும் கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து கோடைக்கால குடிநீர் திட்டங்கள் தொடர்பாக அமைச்சர்களுடன் ஆய்வு நடத்தினார். அப்போது வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் தேவைக்காக ரூ.150 கோடி நிவாரணம் ஒதுக்கப்பட்டது,

இந்தநிலையில் ஏப்ரல் 29-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தனது குடும்பத்தோடு சென்னையில் இருந்து புறப்பட்டு மதுரை சென்று அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானலுக்கு ஓய்வெடுக்க சென்றார்.

முதல்வர் வருகையை ஒட்டி கொடைக்கானலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஏப்ரல் 30-ஆம் தேதி மாலையில் பசுமை பள்ளத்தாக்கு அருகே உள்ள கோல்ப் மைதானத்தில் சிறிதுநேரம் கோல்ப் விளையாடினார்.

முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில், குறிஞ்சியாண்டவர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

இந்தநிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது பயணத்தை முடித்துவிட்டு கொடைக்கானலில் இருந்து கார் மூலமாக புறப்பட்டு இன்று மாலை மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ரோஹித் வெமுலா வழக்கு முடித்துவைப்பு : போலீஸ் சொன்ன காரணம் என்ன?

ஒரு வருடம்… மணிப்பூரில் பற்றி எரியும் தீ எப்போது அணையும்? கார்கே கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share