”மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கக் கூடிய ஊரறிந்த எட்டப்பர்கள் அதிமுக, பாமக ஆகிய கட்சிகள்தான்; ஊரறியாத எட்டப்பர்கள் யார் என்பது இனி தெரியவரும்| என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக கூட்டணி அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆகஸ்ட் 9-ந் தேதி ’அமைதிப் பேரணி’ நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், ”யார் யாரெல்லாம் இந்த தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்களோ, அவர்கள் எல்லாம் எட்டப்பர்கள். ஏனென்றால், தமிழ்நாட்டின் அதிகாரம் போய் விடும்; தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகள் போய் விடும்.
எட்டப்பர் என்ன செய்தார்.. வீரபாண்டிய கட்டபொம்மனை பிரிட்டிஷ்காரர்களிடம் காட்டிக் கொடுத்தார்.

நவீன எட்டப்பர்கள் யாருன்னு கேட்டீங்கன்னா, பாமகவும் அதிமுகவும்தான். ”மோடிஜி என்ன சொல்றாரோ, எங்கஜி சொல்றபடிதான் நாங்க நடப்போம்”.. அப்படின்னு சொல்லிட்டாங்க.

இப்ப ஊரறியாத எட்டப்பர்கள் சிலர் இருக்கிறார்கள்; தொகுதி மறுவரையறைக்கு ஆதரவாக வாக்களிக்கும் போது அந்த எட்டப்பர்கள் யாரென்று தெரியவரும்” என்றார்.
