வீக் எண்டில் குழந்தைகளுக்குப் பிடித்த உணவைத் தயாரித்துக் கொடுப்பதே சற்று சவாலான விஷயம்தான். அந்த வகையில் சுலபமாகக் கிடைக்கக்கூடிய வாழைப்பழங்களை வைத்து இந்த மில்க் ஷேக் செய்து கொடுங்கள். இந்த வீக் எண்டை குழந்தைகளுடன் கொண்டாடுங்கள்.
என்ன தேவை
வாழைப்பழம் (பூவன்பழம்) – 4
காய்ச்சி ஆறவைத்த பால் – 2 கிளாஸ்
வெனிலா ஐஸ்கிரீம் – 3 ஸ்கூப்
வெனிலா எசென்ஸ் – 2 துளிகள்
சர்க்கரை – 6 டீஸ்பூன்
ஐஸ் க்யூப்ஸ் – தேவையான அளவு
எப்படி செய்வது
தோல் நீக்கிய வாழைப்பழத்தை மிக்ஸியில் போட்டு மையாக அரைத்து, அதனுடன் இரண்டு ஸ்கூப் வெனிலா ஐஸ்கிரீம், வெனிலா எசென்ஸ், பால், சர்க்கரை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுங்கள்.
வாய் அகன்ற பாத்திரத்தின் உள்ளே ஐஸ் க்யூப்ஸைப் போட்டு, அதனுள்ளே ஒரு சிறிய பாத்திரத்தை வைத்து, தயாரித்த மில்க் ஷேக்கை அதில் ஊற்றுங்கள்.
பரிமாறும்போது, இதை ஒரு கிளாஸில் ஊற்றி, மீதம் இருக்கும் ஒரு ஸ்கூப் ஐஸ்கிரீமை அதன் மேல் வைத்துக் கொடுத்தால், சூப்பராக இருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : சைதாப்பேட்டை வடகறி
கிச்சன் கீர்த்தனா : காஞ்சிபுரம் இட்லி… மிளகு ஸ்பெஷல்!
Rain: ஜில்லுன்னு ஒரு அப்டேட்… தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு!
தேர்தல் ஆணையர்கள் நியமனம்..தடை விதிக்க முடியாது..ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்