டிபன் வகைகளில் எவர்கிரீன் என்றால் அது இட்லிதான். காஞ்சிபுரம் என்றாலே, காமாட்சி அம்பாள், ஏகாம்பரேஸ்வரர், வரதராஜ பெருமாள் என மூவரும் குடியிருக்கும் கோயில்கள் முதலில் நினைவுக்கு வரும். இவற்றுக்கு அடுத்தபடியாக பட்டாடைகள் நினைவுக்கு வரும். இதற்கு இணையாக புகழ்பெற்றது காஞ்சிபுரம் இட்லி. காஞ்சிபுரத்துக்காரர்கள், கோயில் இட்லி என்பார்கள். இதை நீங்கள் செய்து ருசிக்க இந்த ரெசிப்பி உதவும். Kanchipuram Idli Pepper Special
என்ன தேவை?
பச்சரிசி – 2 கப்
உளுந்து – ஒரு கப் மற்றும் 2 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
மிளகு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
இஞ்சி – நறுக்கிய துண்டுகள் ஒரு டீஸ்பூன்
சுக்குப்பொடி – அரை டீஸ்பூன்
பெருங்காயம் – அரை டீஸ்பூன்
நெய் – ஒரு டீஸ்பூன்
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – 10 இலைகள்
எப்படிச் செய்வது?
பச்சரிசி, உளுத்தம்பருப்பு மற்றும் வெந்தயம் மூன்றையும் நன்கு கழுவி ஒன்றாக மூன்று மணி நேரம் ஊறவைத்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். இதனுடன் உளுந்து, மிளகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, சுக்குத்தூள், உப்பு சேர்த்து, பிறகு நெய் மற்றும் தயிர் சேர்த்துக் கலந்து ஐந்து முதல் ஆறு மணி நேரம் புளிக்கவைக்கவும். பின்னர் மந்தாரை இலை அல்லது வாழையிலையை மூங்கில் குழாயில் இட்டு அதில் மாவை ஊற்றிக்கொள்ளவும். மூங்கில் குழாய் இல்லை என்றால் உயரமான டம்ளர்களில் அல்லது கப்புகளில் ஊற்றி இட்லிப்பாத்திரத்தில் வைத்து வேகவைக்கவும். வெந்த இட்லியை ஒரு குச்சியால் அடி வரை குத்திப் பார்க்கவும். குச்சியில் மாவு ஒட்டாமல் இருந்தால் இட்லி வெந்துவிட்டது என்று அர்த்தம். இட்லி வெந்ததும் கொஞ்ச நேரம் ஆறவைத்துக் கவிழ்த்தால், காஞ்சிபுரம் இட்லி தயார்.
குறிப்பு: காஞ்சிபுரம் இட்லியுடன் மிளகை மட்டுமே சேர்த்துச் செய்வதற்குக் காரணம், மிளகு கொடிய விஷத்தையும் முறிக்கும் சக்தி கொண்டது. அத்துடன் சுக்குப்பொடி ஜீரண சக்தியை மேம்படுத்தும். பயணங்களில் இந்த இட்லி கெடாமல் இருப்பதுடன் எளிதில் சீரணமாகும், அனைவருக்கும் ஏற்ற, தொட்டுக்கொள்ள எதுவும் தேவைப்படாத உணவாக இருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திருக்கோவிலூர் வட போச்சே…. அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: இரட்டை இலையை முடக்கு… டெல்லியிடம் TTVயின் ஒரே நிபந்தனை!