கரூர் பெருந்துயர்… 31 குடும்பத்தினருக்கு பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!

Published On:

| By Kavi

கரூர் பெருந்துயரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு முதல்வர் விஜய் இன்று (ஜூலை 10) பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

முதல்வர் விஜய் இன்று கரூருக்கு வருகைத் தந்தார். அட்லஸ் கலையரங்க வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில், கரூர் பெருந்துயரில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தனது கணவனை இழந்த சாந்தி என்பவருக்கு மட்டும் ரூ.10 லட்சம் கருணை தொகை வழங்கிய விஜய், மற்றவர்களுக்கு பள்ளிக் கல்வித் தறையில் இளநிலை உதவியாளர், மாவட்ட வருவாய் அலுவலக உதவியாளர், இரவு காவலர், மசால்ஜி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் இளநிலை உதவியாளர், காவல்துறையில் இளநிலை உதவியாளர், பேரூராட்சிகள் துறை இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கான ஆணையை வழங்கினார்.

ADVERTISEMENT

யார் யாருக்கு என்னென்ன பணிகள் – முழு பட்டியல்!

முன்னதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இந்த பணிகள் தற்காலிகமானதாக இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share