2026 தேர்தல் குறித்து கார்த்தி சிதம்பரம் சொன்ன ‘அந்த’ ஒரு வார்த்தை.. தவெக ‘ஷாக்’!

Published On:

| By Mathi

Karti Chidambaram TVK Congress

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ”பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு நல்லது இல்லை” என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் (Karti Chidambaram) தெரிவித்துள்ளார்.

திருச்சியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அமைச்சரவையில காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக பங்கேற்கும். எத்தனை அமைச்சர்கள், என்ன இலாக்கா என்பதெல்லாம் முடிவெடுக்க வேண்டியது முதலமைச்சர்தான். அவர் என்றைக்கு அமைச்சரவை விரிவாக்கம் செய்கிறாரோ, அன்றைக்கு காங்கிரஸ் கட்சியும் பங்கேற்கும்.

ADVERTISEMENT

புதிய அரசுக்கு டைம் கொடுக்கனும்..

கேள்வி: புதிய அரசு அமைஞ்சிருக்கு, புதிய அறிவிப்புகள்… மகளிர் உதவித்தொகை இதெல்லாம்…

கார்த்தி சிதம்பரம்: இப்பதான் கவர்மெண்ட் வந்திருக்கு. அவங்க பதவியேற்று இன்னைக்கு இன்னும் ஒரு வாரம் கூட ஆகல. இப்பதான் நம்பிக்கை வாக்குல வெற்றி பெற்றிருக்காங்க. கவர்மெண்ட் செட்டில் ஆயிட்டு இருக்கு. இன்னும் போர்ட்ஃபோலியோஸ் (Portfolios) எல்லாம் அலகேட் பண்ணல. மினிஸ்ட்ரி எக்ஸ்பான்ஷன் (Ministry expansion) பண்ணல. டைம் குடுக்கணும்… செட்டில் ஆகுறதுக்கு டைம் குடுக்கணும். செட்டில் ஆகுறதுக்கு டைம் குடுத்ததுக்கு அப்புறம்தான் என்ன பண்றாங்க, எப்படி பண்றாங்கன்னு பாக்கணும்.

ADVERTISEMENT

இப்ப இதெல்லாம் இருக்குற ஸ்கீம தொடர்றாங்க. அந்த 1000 ரூபாய்ன்றது ஏற்கனவே எக்ஸிஸ்டிங் ஸ்கீம்தான் (Existing scheme). அது தொடர்ச்சியா நடந்துட்டு இருக்கு, இன்னைக்கு டெபாசிட் ஆயிடுச்சுன்னு நான் கேள்விப்பட்டேன். அதையெல்லாம் நான் வரவேற்கிறேன். பட் (But), அவங்களுடைய திட்டங்கள் எல்லாம் இனிமேதானே வகுப்பாங்க. ஒரு பட்ஜெட் போடணும், நிறைய இருக்கு. அதனால எந்த கவர்மெண்ட்டா இருந்தாலும் ஒரு பிரியட் (Period) குடுக்கணும்ல அவங்கள செட்டில் பண்றதுக்கு… செட்டில் ஆகுறதுக்கு டைம் குடுக்கணும்.

திட்டங்கள் தொடரவே செய்யும்

கேள்வி: எப்பவுமே திமுகவின் திட்டங்கள்தான் மறுபடியும்…

ADVERTISEMENT

கார்த்தி சிதம்பரம்: எப்பவுமே அரசாங்கத்துக்கு பிரேக்கே கிடையாது. கவர்மெண்ட் ஆஃப் இந்தியாவாக (Government of India) இருந்தாலும் சரி, கவர்மெண்ட் ஆஃப் தமிழ்நாடாக (Government of Tamil Nadu) இருந்தாலும் சரி அது ஒரு கண்டினியூவம் (Continuum). அது தொடர்ச்சியாக நடந்து கொண்டு இருக்கிறதுதான். அரசாங்கத்துல அங்கம் வகிக்கிறவங்க வேணா மாறலாமே தவிர, அரசாங்கம் மாறுவது கிடையாது. அதனால எந்த அரசாங்கமாக இருந்தாலும், முன்னாடி இருந்த திட்டங்களோட தொடர்ச்சியாகத்தான் இன்னொரு திட்டம், அதுக்கு மேலதான் பில்ட் (Build) பண்ணிட்டு போவாங்க.

இப்ப வந்து மத்தியில இருக்க பாஜக அரசாங்கம் சிலது செய்றாங்கன்னா, அதுக்கு முந்தின இருக்குற யூபிஏ (UPA) அரசாங்கம் செஞ்சதத்தான் அவங்க அதுக்கு மேல செய்ய முடியும். அதனால அது கண்டினியூவம்தான். பல திட்டங்கள் தொடரத்தான் செய்யும். இப்ப நாளைக்கு இந்த ஊர்ல இருந்து அந்த ஊருக்கு ஒரு பஸ் போகுதுன்னா, ஏற்கனவே போற பஸ் போயிட்டுதான் இருக்கும். சிலதை மாத்தி பண்ணுவாங்க. அவங்களுக்கு இந்த கவர்மெண்ட்டுக்கு டைம் குடுக்கணும் நீங்க. டைம் குடுக்குறதுக்கு முன்னாடியே நீங்க வந்து என்ன பண்றாங்க ஏது பண்றாங்கன்னு கேக்குறது வந்து நியாயமா இல்ல.

அவங்க வந்து இன்னும் ஒரு வாரம்தான் ஆகுது. மந்திரி சபையை அவங்க விரிவாக்கப்படுத்தணும். மந்திரிகளுக்கு வந்து இலாக்கா குடுக்கணும். முதல் பட்ஜெட் போடணும். அதுக்கப்புறம்தான் நம்ம வந்து ஏதாவது அவங்க பண்ற அணுகுமுறையை பத்தி நம்ம சொல்ல முடியும்.

பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு நல்லது இல்லை

கேள்வி: வேட்பாளர் யாருன்னே தெரியாமையே இந்த தேர்தல்ல ஓட்டு போட்டிருக்காங்களே…

கார்த்தி சிதம்பரம்: இந்த தேர்தல் வந்து ‘கேண்டிடேட் அக்னாஸ்டிக்’ (Candidate Agnostic) தேர்தல். அதாவது, கேண்டிடேட் யாருன்னு பார்க்காம, விசில் சின்னத்துக்கும் விஜய்க்கும் வாக்களித்திருக்கிறார்கள். ஆனா, இந்த மாதிரி சில தேர்தல்கள் முன்னாடி நடந்திருக்கு. கேஜ்ரிவாலுக்கு நடந்த தேர்தல் டெல்லியிலயும் இப்படித்தான். கேஜ்ரிவால் முதல்ல ஜெயிக்கும் பொழுது கேஜ்ரிவாலுக்கு ஓட்டு போட்டதாத்தான் சொன்னாங்களே ஒழிய, அங்க இருக்குற வேட்பாளர் பேரே தெரியாது.

ஒரு வகையில இது வந்து ஒரு ஆரோக்கியமான… பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு நல்லது கிடையாது. ஆனா, இந்த தேர்தல்ல ஓவர்வெல்மிங் சென்டிமென்ட் (Overwhelming sentiment) வந்து ஒரு மாற்றம். அந்த மாற்றத்திற்கு முகம் விஜய், அந்த மாற்றத்துக்கு சிம்பல் (Symbol) விசில்… அவ்வளவுதான்னு ஓட்டு போட்டாங்களே தவிர, வேட்பாளரை யாரும் பார்க்கல. இனிமேதான் பல வேட்பாளர்கள் தொகுதியிலேயே போய் அவங்கள அறிமுகப்படுத்திக்கணும். இவ்வாறு கார்த்தி சிதம்பரம் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share