மீண்டும் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

Published On:

| By Kavi

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைந்திருக்கும் நிலையில் நிர்வாக ரீதியான மாற்றங்கள் நடந்து வருகின்றன. 

ADVERTISEMENT

அந்த வகையில் முக்கிய ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்.

முன்னாள் துணை முதல்வரின் செயலாளராக இருந்த பிரதீப் யாதவ், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகவும், 

ADVERTISEMENT

தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் முதன்மைச் செயலாளராக இருந்த வெங்கடேஷ், கைத்தறி, கைவினைப் பொருட்கள் ஜவுளி மற்றும் காதர் துறை செயலாளராகவும், 

உயர்கல்வித்துறை செயலாளராக இருந்த ஷங்கர் வேளாண் உற்பத்தி மற்றும் உழவர் நலத்துறை செயலாளராகவும், 

ADVERTISEMENT

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஆணையராக இருந்த லதா கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராகவும், 

விடுப்பில் இருந்த ஐஏஎஸ் காயத்ரி கிருஷ்ணன், வருவாய் நிர்வாக மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையராகவும், 

நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குனர் தீபக் ஜேக்கப், வழிகாட்டுதல் (கைடன்ஸ்) பிரிவு நிர்வாக இயக்குனராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share