டிஜிட்டல் திண்ணை: பெரும் குழப்பத்தில் விஜய்.. ஸ்கெட்ச் போட்டு காத்திருக்கும் எடப்பாடி- ’எஸ்கேப்’ ஆவார்களா எஸ்பி வேலுமணி எம்.எல்.ஏ.க்கள்?

Published On:

| By Mathi

வைஃபை ஆன் செய்ததும், “சுத்துதே சுத்துதே பூமி… இது போதுமடா போதுமடா சாமி…” என ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்ன ப்ரோ.. ரொம்ப யூத்தா பாடுறீங்க?

ADVERTISEMENT

சம்பவங்கள் ஒவ்வொன்னும் புதுசா புதுசா இருக்கே..

எஸ்பி வேலுமணி- சிவி சண்முகம் கோஷ்டியில இருந்து எம்.எல்.ஏக்களை மறுபடியும் கொண்டு வர்றதுக்கு எடப்பாடி தரப்பு தீவிரமா பேச்சுவார்த்தை நடத்தி கிட்டு இருக்கு..

ADVERTISEMENT

இன்னொரு பக்கம், சிஎம் விஜய்யை ஆதரித்த 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிபோகுமோ?ன்னு சீரியஸ் டிஸ்கஷன் நடந்துகிட்டே இருக்கு.

இதைப் பத்தி அதிமுகவில சீனியர்ஸ்கிட்ட பேசுனப்ப, “எஸ்பி வேலுமணி டீம்ல 34 எம்.எல்.ஏக்கள் இருக்காங்க.. மூன்றில் 2 பங்கு எம்.எல்.ஏக்கள் இருக்கிறாங்கன்னு நம்பிதான் பலரும் போனாங்க.. ஆனா அசெம்பிளியில 25 பேர்தான் விஜய் கவர்மெண்ட்டுக்கு ஆதரவா ஓட்டுப் போட்டாங்க..

ADVERTISEMENT

எஸ்பி வேலுமணி டீம்ல இருக்கிற அதிமுக எம்.எல்.ஏக்கள்கிட்ட, “நீங்க எலக்‌ஷன்ல செஞ்ச செலவுக்குன்னு முதல்ல ரூ2 கோடி கொடுத்தாங்க. .அதுக்கு அப்புறமா மறுபடியும் ரூ3 கோடின்னு மொத்தமா இதுவரைக்கும் ரூ5 கோடி கொடுத்திருக்காங்க…

அதே மாதிரி ”டெல்லி நமக்கு சப்போர்ட் செய்யுது. .டெல்லிகிட்ட நானும் பேசிகிட்டு இருக்கேன்.. தங்கமணியும் டெல்லியில பேசுறாரு.. நமக்கு டெல்லி ஹெல்ப் இருக்குது”ன்னு எஸ்பி வேலுமணி பேசி எம்.எல்.ஏக்களை தக்க வைக்க முயற்சிக்கிறாரு..

ஆனா இப்ப, பார்ட்டி லீடர் எடப்பாடியோட கொறடா போட்ட உத்தரவுதான் செல்லும்.. அப்படிங்கிற நிலைமை மெல்ல மெல்ல புரிய ஆரம்பிச்சிருச்சு.. அதனால அங்க இருக்கிற எம்.எல்.ஏக்கள்கிட்ட எடப்பாடி தரப்புல இருந்து பேச்சுவார்த்தை நடத்துறாங்க..

எடப்பாடி தரப்புல, “உங்க எலக்‌ஷன் செலவு எல்லாத்தையும் இங்க வாங்க பார்த்துக்கலாம்..”னு நம்பிக்கையா சொல்லி இருக்காங்க..

அதே நேரத்துல எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், சி. விஜயபாஸ்கர் போன்ற சில லீடர்ஸ் செல்வாக்கா இருக்கிற ஊர்களில அதிமுகவில கொண்டாட்டமாவும் இருக்குது.. விழுப்புரம் மா.செ.வாக இருந்த சிவி சண்முகம் பதவியை பறிச்சுட்டு நகர செயலாளர் பசுபதியை மா.செ.வா அறிவிச்சாரு எடப்பாடி.. அன்னைக்கு நைட்டே பட்டாசு வெடிச்சு கொண்டாடிட்டாங்க அதிமுகவினர்.. சென்னையில இருந்து விழுப்புரத்துக்கு வந்த பசுபதிக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்திருக்காங்க அதிமுக நிர்வாகிகள்..

சி.விஜயபாஸ்கரோட புதுக்கோட்டை மாவட்டத்துல கட்சி ஆபீஸ், “உங்களுக்கா? எங்களுக்கா?”ன்னு பிரச்சனை ஆகி இழுத்து மூடிட்டாங்க.. இப்ப போலீஸ்
பாதுகாப்பு போட்டிருக்காங்க..

இப்படி இதுவரைக்கும் ‘நந்தி’ மாதிரி இருந்துகிட்டு இருந்தவங்க போயிட்டாங்கன்னு புதுசா எடப்பாடி போட்ட மா.செ.க்கள் ஆதரவாளர்கள் கொண்டாடறாங்கன்னு” சொல்றாங்க ப்ரோ..

சரிங்க ப்ரோ.. இன்னும் சிஎம் விஜய் மினிஸ்டர்ஸுக்கு இலாகா ஒதுக்காம இருக்காரே?

ஆமாங்க ப்ரோ.. மே 10-ந் தேதி பதவி ஏத்துகிட்டாங்க.. நம்பிக்கை வாக்கெடுப்பும் முடிஞ்சு போச்சு.. இன்னும் அமைச்சர்களுக்கான துறைகளை பத்தி ஒன்னும் அறிவிப்பு வரலைதான்..

இதை பத்தி சிஎம் விஜய்க்கு நெருக்கமானவங்ககிட்ட விசாரிச்சப்ப, விஜய் ரொம்பவே குழம்பித்தான் இருக்கிறார்.. அதிமுகவோட எஸ்பி வேலுமணி டீம்ல இருந்து 4 பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்கலாம்னாலும் என்ன துறை ஒதுக்கிறதுன்னு கன்பியூசன்.. ஏன்னா அவங்க கேட்கிற துறைகளை அமைச்சரா பதவியேத்துகிட்ட தவெகவினரும் கேட்கிறாங்க..

அதோட அப்படி எஸ்பி வேலுமணி டீம்-க்கு அமைச்சர் பதவி கொடுத்தா அது நிலைக்குமான்னும் சந்தேகம்.. அதனால அட்வகேட் ஜெனரலா போடப்பட்டுள்ள விஜய நாராயணன ரிப்போர்ட் கேட்டாரு விஜய்.. அவர், சபாநாயகரோட அதிகாரங்கள் என்ன? உயர்நீதிமன்ற தீர்ப்புகள் என்ன? உச்சநீதிமன்ற தீர்ப்புகள் என்ன?ன்னு டீட்டெய்ல் ரிப்போர்ட்டை கொடுத்திருக்காரு”னு சொல்றாங்க ப்ரோ…

அதே நேரத்துல காங்கிரஸ் கட்சியில ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ரெண்டு பேருக்கும் அமைச்சர் பதவி கன்ஃபார்ம் ஆகியிருச்சாம்..

இப்படிதான் ஒவ்வொரு கட்சியிலும் ஒவ்வொரு நிமிஷமும் பொலிட்டிக்கல் பீவர் அதிகமாகதான் இருக்கே தவிர குறையவே இல்லையே” என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share