வைஃபை ஆன் செய்ததும், “சூரியனை.. சுட்டது யாரு?”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ.. திமுக மேட்டரை சொல்ல போறீங்களா?
ஆமாம் ப்ரோ.. எலக்ஷன் தோல்வியால ரொம்பவே அப்செட் ஆன திமுக கேடர்ஸுக்கு ரெண்டு நாளா நடக்குற சம்பவங்கள் ஆறுதலா இருக்குதாம்..
மா.செ.க்கள் கூட்டத்துல பேசுன ஸ்டாலின், என்ன ஆனாலும் சரி, சூரியன் ஒருபோதும் மறையாது. திரும்ப உதித்தே தீரும். சூரியன் இல்லாமல் எதுவும் நடக்காது. இது இயற்கை நியதி மட்டுமில்ல, தமிழ்நாட்டு அரசியல் நியதியும் இதுதான்… கட்சியை சீரமைச்சு, புது எனர்ஜி கொடுப்போம். இனிமே, ரொம்ப கவனமா, எல்லா விஷயங்களையும் செய்யணும்”னு ரொம்பவே சீரியசா பேசியிருந்தார்
அதோட “ திமுகவினர் பொதுமக்களோட கருத்தை கேட்க வெப்சைட் தொடங்குவோம்”னு சொல்லி முடிக்கலை நேத்து நைட்டே உடன்பிறப்புகளின் குரல்னு வெப்சைட்டு ஆரம்பிச்சுட்டாங்க.. அதுல வாய்ஸ்ல கட்சியை பத்தின விஷயங்களை சொல்லலாம்.. டெக்ஸ்டாவும் எழுதி பதிவு செய்யலாம்..
அதே மாதிரி, ஏன் தோத்தோம்னு விசாரணை நடத்தி ரிப்போர்ட் கொடுக்க 36 பேர் கொண்ட குழுவை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்பி இருக்காங்க.. ஜூன் 5-ந் தேதிக்குள்ள இந்த டீம் அறிக்கை கொடுக்க சொல்லி இருக்காங்க.. இந்த குழு எப்படி செயல்படனும்னு ஓபனாவே சொல்லி இருக்காங்க..
திமுக இப்படி ஜரூரா மறுபடியும் களத்துல இறங்கி இருக்கு.. இதை பத்தி ஸ்டாலினுக்கு நெருக்கமானவங்ககிட்ட பேசுனப்ப, “எலக்ஷன் தோல்விக்கு ஒருத்தரை ஒருத்தர் குறை சொல்லாம கட்சிக்காரங்க கருத்தை கேட்டு நடவடிக்கை எடுப்போம்”னு சபரீசன், உதயநிதிகிட்ட ஸ்டாலின் டிஸ்கஷன் செஞ்சாரு.. அப்பதான் இந்த மாதிரி குழுவை அனுப்பலாம்னு யோசிச்சாங்க.. சரி.. இதை பத்தி கனிமொழிகிட்டேயும் நேரில போய் டிஸ்கஷன் செய்யுங்கன்னு ஸ்டாலின் அனுப்பி வைச்சாரு..
திமுக ஆதரவோட அதிமுக ஆட்சின்னு பேச்சு வந்ததுல கனிமொழி ரொம்பவே அப்செட் ஆகி இருந்தாங்க.. ஒருவேளை அப்படி நடந்தா வெளிப்படையாக எதிர்த்து அறிக்கை கொடுக்கிற மனநிலையிலேயும் கனிமொழி இருந்தாங்க..
இதை எல்லாம் தெரிஞ்சதானாலதான் ஸ்டாலின், உதயநிதி- சபரீசன் ரெண்டு பேரையும் கனிமொழியை நேரில சந்திச்சு பேச சொன்னார்..
சிஐடி காலனி வீட்டுக்கு புதன்கிழமை மாலை போன உதயநிதி-சபரீசன், கனிமொழியுடன் 1 மணி நேரத்துக்கும் மேல ஆலோசனை நடத்தினாங்க..
அதுல எந்த மாதிரி குழுவை அமைக்கலாம்? யாரை எல்லாம் குழுவில் போடலாம்?னும் பேசுனாங்க..
ஏற்கனவே இருக்கிற சீனியர்ஸை போட்டா சரிப்பட்டு வராது.. பல பேரு உண்மையை சொல்லவே மாட்டாங்க. .ரிப்போர்ட்டும் சரியா நமக்கு வராது.. அதனால இளைஞர்களா, புதுமுகங்களா மாவட்டங்களுக்கு அனுப்புவோம்.. அவங்க, ஒவ்வொரு மாவட்டத்துலேயும் என்ன நடந்துச்சோ அதை அப்படியே பெர்பெக்ட்டா ரிப்போர்ட்டா கொடுப்பாங்கன்னு மூணு பேரும் முடிவு செஞ்சாங்க.. லிஸ்ட்டையும் அங்கேயே ரெடி செஞ்சுட்டாங்க..
அப்புறமா கனிமொழி- உதயநிதி- சபரீசன் மூணு பேருமே ஸ்டாலினை சந்திச்சு, எப்படி எல்லாம் செய்யலாம்? யாரை எல்லாம் மாவட்டங்களுக்கு அனுப்பலாம்?னு லிஸ்ட் கொடுத்தாங்க.. ஸ்டாலினும் இதை பார்த்துட்டு ஓகே சொல்ல காலையில அறிவிப்பு வந்துருச்சு” என்றனர்.
மாவட்டங்களில்ல இருக்கிற திமுக நிர்வாகிகள்கிட்ட பேசுனப்ப, ”எலக்ஷன் தோல்வியால நொந்து இருக்கிற திமுக தொண்டர்களுக்கு இந்த குழுதான் ஆறுதல்.. இந்த குழுவோட ரிப்போர்ட்டாவது சரியாக கட்சி தலைமைக்கு போய் நல்ல முடிவை எடுத்து கட்சியில இருக்கிற களைகளை தூக்கி போடனும்.. எங்களுக்கு அதை தலைமை செஞ்சு கொடுத்தாலே போதும்”னு சொல்றாங்க ப்ரோ என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடி ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
