மீண்டும் வருகிறாள் காஞ்சனா… ராகவா லாரன்ஸ் அப்டேட்!

Published On:

| By christopher

கடந்த 2007 ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய “முனி” படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதை தொடர்ந்து, அடுத்ததாக கடந்த 2011 ஆம் ஆண்டு “முனி 2 – காஞ்சனா” என்ற படத்தை ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கி வெளியிட்டார். முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டானவுடன் ராகவா லாரன்ஸ் ஸ்டைலை பின்பற்றி ஹாரர் காமெடி திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் அதிகரிக்க தொடங்கியது.

அதன் பிறகு கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான “முனி 3 – காஞ்சனா 2”, கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான “முனி 4 – காஞ்சனா 3” ஆகிய திரைப்படங்களும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

ஒருபுறம், ராகவா லாரன்ஸ் காஞ்சனா சீரிஸ் படங்களின் மூலம் ஃபேமிலி ஆடியன்சை கவர்ந்து பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளிக் கொண்டு இருந்த நேரத்தில், மற்றொருபுறம் இயக்குநர் சுந்தர் சி அரண்மனை சீரிஸ் படங்களின் மூலம் ராகவா லாரன்ஸை ஓவர் டேக் செய்து கொண்டிருந்தார்.

முனி 4 – காஞ்சனா 3 படத்திற்குப் பிறகு காஞ்சனா சீரிஸ் படங்களை இயக்காமல் இருந்த ராகவா லாரன்ஸ் தற்போது அரண்மனை 4 திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டானதும், தற்போது “காஞ்சனா 4” திரைப்படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார்.

காஞ்சனா 4 படத்திற்கான படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாகவும், தற்போது இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், ராகவா லாரன்ஸின் ராகவேந்திரா புரொடக்ஷன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது என்றும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அரண்மனை 4 வெற்றிக்கு பிறகு தற்போது காஞ்சனா 4 திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் மீண்டும் தமிழ் சினிமாவில் ஹாரர் காமெடி திரைப்படங்களுக்கான டிமாண்ட் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழருக்கு விஜய் வாழ்த்து!

பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கு : ராகுலுக்கு நீதிமன்றம் உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share