பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கு : ராகுலுக்கு நீதிமன்றம் உத்தரவு!

அரசியல்

கர்நாடக மாநில பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமின் வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இன்று (ஜூன் 7) உத்தரவிட்டுள்ளது.

ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு

கடந்த 2023ஆம் ஆண்டு கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அம்மாநில காங்கிரஸ் சார்பில் சில விளம்பரங்கள் வெளியிடப்பட்டது. அந்த விளம்பரங்களில் பாஜக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட உட்கட்டமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களிடம் இருந்து 40 சதவீதம் லஞ்சம் பெறப்பட்டதாகவும், கொரோனாவை தடுக்கும் உபகரணங்களுக்கான டென்டர் விவகாரத்தில் 75 சதவீதம் லஞ்சம் பெறப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது.

இந்த விளம்பரங்கள் பாஜக மீது அவதூறு பரப்பும் நோக்கில் வெளியிடப்பட்டு இருப்பதாக கர்நாடக மாநில பாஜக சார்பில் குற்றச்சாட்டப்பட்டு, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல்காந்தி, சித்தராமையா, டி.கே.சிவக்குமார் மீது வழக்கு தொடரப்பட்டது.

ராகுல்காந்திக்கு ஜாமின்

இந்த வழக்கின் மீதான விசாரணை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அவதூறு வழக்கில் ஜூன் 1ஆம் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் நேரில் ஆஜராகினர். அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி கே.என்.சிவக்குமார் அமர்வு அவர்களுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

மேலும், வழக்கு விசாரணைக்கு ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இன்று (ஜூன் 7) டெல்லியில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்த ராகுல் காந்தி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

கர்நாடக மாநில பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ராகுல் காந்தி நேரில் ஆஜரானதை தொடர்ந்து, அவருக்கு ஜாமின் வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நீட் தேர்வு குளறுபடி: ரத்து செய்யக்கோரி மாணவர்கள் வழக்கு!

தொடர்ந்து 8வது முறையாக மாறாத ரெப்போ வட்டி விகிதம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0