கள்ளக்குறிச்சி மரணம்: ஆர்ப்பாட்டத்தை அறிவித்த அதிமுக!

Published On:

| By Minnambalam

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்த நிலையில், தற்போது அதிமுகவும் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ADVERTISEMENT

“செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கள்ளச் சாராயம் குடித்து 22-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தபோது, ‘கள்ளச் சாராயம் விற்பனை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. அதனை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்’ என்று  நான் சொன்னேன்.

அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லி, வழக்கை CBCID-யிடம் ஒப்படைத்தார். அந்த வழக்கு இதுவரை என்ன ஆனது என்று தெரியவில்லை.

ADVERTISEMENT

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம்,கருணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கள்ளச் சாராயம் அருந்தியதன் காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்த உயிர் பலிக்கு முதல்வர் ஸ்டாலின் தார்மீகப் பொறுப்பேற்று, உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும்,

இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்களை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும் அதிமுக சார்பில் ஜூன் 26 -ஆம் தேதி காலை 10 மணியளவில், அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கள்ளச்சாராய மரணம்: கள்ளக்குறிச்சியில் விஜய்…. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்!

கள்ளச்சாராய மரணம்: கனமழைக்கு இடையே உடல்கள் தகனம்!

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share