கள்ளச்சாராய மரணம்: கனமழைக்கு இடையே உடல்கள் தகனம்!

தமிழகம்

கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உடல்கள் கோமுகி ஆற்றங்கரையோரத்தில் இன்று (ஜூன் 20) தகனம் செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த 39 பேர் உயிரிழந்தனர். இவர்களின் உடல்கள் மருத்துவமனையில்  உடற்கூறாய்வுக்கு பிறகு அவர்களது வீடுகளுக்கு எடுத்து செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

தொடர்ந்து ஊர்வலமாக உடல்கள் எடுத்து செல்லப்பட்டு கோமுகி ஆற்றங்கரையில் தகனம் செய்யப்பட்டது.

22 பேரின் உடல்கள் தகனம் செய்யப்பட்டது. மூன்று பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது. கருணாபுரம் பகுதியில் கனமழை பெய்ததால், தகனம் செய்வதற்கு சற்று தாமதமானது. தகன ஏற்பாடுகளை வருவாய் மற்றும் காவல்துறையினர் கவனித்தனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கள்ளச்சாராய மரணம்… இழப்பீடுகள் ஈடுகட்டாது: ஜி.வி.பிரகாஷ் காட்டம்!

‘ஜெயம்’ கொடுத்த முதல் படம்… ரவியின் சக்சஸ் ஃபார்முலா இதுதான்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *