திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் கே.என்.நேரு வெற்றி பெற்றார்.
திருச்சி மேற்கு தொகுதியில் திமுக சார்பில் கே.என்.நேரு, தவெக வேட்பாளர் ராமமூர்த்தி, அமமுக வேட்பாளர் ராஜசேகரன் ஆகியோர் போட்டியிட்டனர்.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. சில சுற்றுகளுக்குப் பின்னர் கே.என்.நேரு முன்னிலை வகிக்கத் தொடங்கினார். இந்நிலையில் 24-வது சுற்று முடிவில் கே.என்.நேரு 4,786 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
