சின்னம் வரையும் திமுக-வினர்

By Balaji

|

Published on 16 Apr 2016, 12:00 AM

வேட்பாளர்களை அறிவித்த உடனே வேகமாக பிரச்சார பணிகளைத் தொடங்கியுள்ளனர் திமுக-வினர். மறைந்த வீரபாண்டியார் மகனும் வீரபாண்டி தொகுதி, திமுக வேட்பாளருமான வீரபாண்டி ராஜா, 17-ம் தேதி காலை, சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு தீவிர பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.

வீரபாண்டி தொகுதிக்குள் சுவர் விளம்பரங்கள், உதயசூரியன் சின்னம் வரையும் பணிகளும் தீவிரமடைந்துள்ளன. வீரபாண்டி தொகுதி திமுக-வினர் முகத்தில் உற்சாகம் தெரிகிறது.

ADVERTISEMENT

‘தொகுதியில் வலுவான எதிர் போட்டியாளர் இல்லை. மக்கள் நலக் கூட்டணியிலும் இந்தத் தொகுதி சிபிஐ-க்கு வழங்கப்பட்டுள்ளது. அதனால்தான் சந்தோஷமாக இருக்கிறோம்’ என்ற திமுக-வினர், ‘சோம்பலாக இருந்து விடக்கூடாதுன்னு சீக்கிரமாக, அதிகாலையிலேயே பிரச்சாரப் பணிகளை தொடங்கிவிடுகிறோம்’ என்கின்றனர் அவரின் ஆதரவாளர்கள்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel