திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில், அதிமுக வேட்பாளராக பன்னீர்செல்வம் என்பவர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், ‘பன்னீர்செல்வத்தை பெரும்பாலான கட்சிக்காரர்களுக்கே தெரியாது. கட்சிக்காரர்களிடம் அவர் இணக்கமான போக்கை கடைப்பிடிப்பதில்லை’ என போயஸ்கார்டனுக்கு தகவல் சென்றிருக்கிறது. இதனால், நன்னிலம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் காமராஜை, திருவாரூரில் போட்டியிட வைக்கலாம் என்ற யோசனைக்கு வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்னிலம் தொகுதியில் அதிமுக செல்வாக்கோடு இருப்பதாகவும், எனவே அங்கே எந்த வேட்பாளரை நிறுத்தினாலும் வெற்றி பெற்றுவிடலாம் என்று உள்ளூர் கட்சிக்காரர்கள் தெரிவித்துள்ளனர். அதனால், கருணாநிதி போன்ற பலம்வாய்ந்த பெரிய தலைவரை எதிர்த்து குறைந்தபட்சம் நல்லஅறிமுகம் உள்ள வேட்பாளரை நிறுத்தினால்தான் கட்சியினர் உற்சாகம் இழக்காமல் இருப்பார்கள் என்று போயஸ்கார்டனுக்குத் தகவல் சென்றுள்ளதால், விரைவில் அடுத்த மாற்றம் நடக்கலாம்.
அதிமுக: திருவாரூரில் வேட்பாளர் மாற்றம்?
By Balaji
|
Published on 19 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








