ஜெம் வீரமணி மகள் அர்ச்சனாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்.. வங்கிக் கணக்குகள் முடக்கம்!

Published On:

| By Mathi

Jem Veeraman-Bank Accounts

போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஜெம் வீரமணி மகள் அர்ச்சனா, வெளிநாடு செல்வதைத் தடுக்க லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜெம் வீரமணி மற்றும் அவரது நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

ஜெம் வீரமணி மீது ஏற்கெனவே 8 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் புதிதாக அளித்த புகார்களின் அடிப்படையில் மேலும் 2 வழக்குகளை சென்னை காவல்துறை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் ஜெம் வீரமணி மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

புதிதாகப் பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளிலும் ஜெம் வீரமணியை நவம்பர் 10-ந் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகள் அர்ச்சனாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

இந்த வழக்குகளின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனா வீரமணிக்கு எதிராக சென்னை காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இதன் மூலம் அர்ச்சனா வீரமணி வெளிநாடு செல்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

லுக் அவுட் சுற்றறிக்கை என்பது விமான நிலையங்கள் உள்ளிட்ட சர்வதேசப் பயணச் சோதனை மையங்களில் சம்பந்தப்பட்ட நபரின் வெளிநாட்டுப் பயணத்தைக் கண்காணிக்கவும், உரிய நடவடிக்கை எடுக்கவும் குடியேற்ற அதிகாரிகளுக்கு வழங்கப்படும் அறிவிப்பாகும்.

வங்கிக் கணக்குகள் முடக்கம்

இதனிடையே, ஜெம் வீரமணி மற்றும் அவருக்குச் சொந்தமான நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share