சென்னையில் ரவுடி வெட்டிக் கொலை.. 3 பேர் கைது!

Published On:

| By Mathi

Chenani Adyar Murder

சென்னை அடையாறில் பட்டப்பகலில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த 3 பேர் கொண்ட கும்பல் தப்பிச் செல்லும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, கொலையான இளைஞரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த மைத்ரேயன், காவல்துறையின் சி பிரிவு சரித்திரப் பதிவேட்டில் இடம்பெற்றவர். இன்று காலை அடையாறு இந்திரா நகர் வாட்டர் டேங்க் அருகே மைத்ரேயனை வழிமறித்த கும்பல், ஆயுதங்களால் தாக்கியது. தப்பி ஓடிய அவரைத் துரத்திச் சென்று வெட்டிக் கொன்றுவிட்டு அந்தக் கும்பல் தப்பியோடியது. மைத்ரேயனை கொலை செய்துவிட்டு 3 பேரும் தப்பிச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

ADVERTISEMENT

தகவலறிந்து வந்த அடையாறு போலீசார், மைத்ரேயனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராயப்பேட்டை மருத்துவமனை முன்பு சாலை மறியல்

இதனிடையே மைத்ரேயன் கொலை செய்யப்பட்ட தகவலறிந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், மருத்துவமனை முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

இந்தக் கொலை தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share