ஆகம கோயில்களில் இந்துக்கள் அல்லாதோர் நுழைய ’உறுதிமொழி’ கட்டாயம்.. விஜய்க்கு பாராட்டு- நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வு தீர்ப்பு என்ன?

Published On:

| By Mathi

Agamic Temples

தமிழகத்தில் ஆகம விதிகளின்படி செயல்படும் கோயில்களில், இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய வேண்டுமானால், அந்தக் கோயிலின் தெய்வத்தின் மீது மரியாதை இருப்பதாக உறுதிமொழி அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த தங்கம் வெங்கடேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில், ”தமிழ்நாடு கோயில் நுழைவு அனுமதிச் சட்டம்- 1947 மற்றும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறைச் சட்டம்- 1959 ஆகியவற்றை முறையாக அமல்படுத்த வேண்டும். பிற மத அடையாளங்களை அணிந்தவர்கள் மற்றும் கோயிலின் வழிபாட்டு முறைகளைப் பின்பற்றாதவர்கள், அனுமதி கட்டுப்பாடுகள் உள்ள கருவறைகள் மற்றும் மண்டபங்களுக்குள் நுழைவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

ADVERTISEMENT

இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், டாக்டர் பி.முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.வி.பாலசுப்பிரமணியன், கோயில் நுழைவு தொடர்பான சட்டங்களும் விதிகளும் ஏற்கெனவே பின்பற்றப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து பின்பற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

ADVERTISEMENT

இருப்பினும், அண்மைக்கால நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் தெளிவான தீர்ப்பு வழங்க வேண்டியுள்ளதாகக் கூறிய நீதிபதிகள், அக்.23-ந் தேதி 19 பக்கத் தீர்ப்பை வழங்கினர்.

அந்தத் தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்த முக்கியமான கருத்துகள்:

ADVERTISEMENT

ஆகமக் கோயில்களில் இந்துக்கள் அல்லாதோர் நுழையலாமா?

தமிழகத்தில் உள்ள ஆகமக் கோயில்களின் அறங்காவலர்கள், உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திடாத இந்துக்கள் அல்லாதவர்களைக் கொடிமரத்தைத் தாண்டி அனுமதிக்காமல் ஆகம விதிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்த மனுதாரருக்கு உரிமை உள்ளது. அப்படி செய்யாமல் ஒருவரை அனுமதிக்கும் போது கோயிலின் புனிதத்தன்மை பாதிக்கப்படும்.

அதிலும் பிற மத அடையாளங்களை அணிந்துகொண்டு, சம்பந்தப்பட்ட கோயிலின் தெய்வத்தின் மீது மரியாதை இருப்பதாக உறுதியளிக்காத இந்துக்கள் அல்லாதவர்களைக் கோயில் வளாகத்திற்குள்ளும் அனுமதிக்க முடியாது. இந்த உறுதிமொழி சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகம் நிர்ணயித்துள்ள படிவத்தில் அளிக்கப்பட வேண்டும்.

(The petitioner herein is a Hindu. He is entitled to insist that the trustees of the various Agamic temples in Tamil Nadu uphold the Agamic injunctions by not permitting non-Hindus who do not sign the undertaking from crossing the flag-pole. If such entry is permitted, it would defile the sanctity of the temple. We intend to go a step further. Even entry into the temple premises, cannot be permitted for non-Hindus who sport their religious markers and who do not subscribe their reverence for the deity concerned. This subscription must be in the format prescribed by the institution concerned.)

முதல்வர் விஜய்க்கு பாராட்டு

கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த தமிழக அமைச்சர் ஒருவர், கோயிலில் இந்துக்கள் அல்லாதவர்கள் வழங்க வேண்டிய உறுதிமொழி படிவத்தில் எழுதாமல் திருச்செந்தூர் கோயிலுக்குள் நுழைந்ததை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துள்ளது.

அதே நேரத்தில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற போது உறுதிமொழிப் படிவத்தில் எழுதி கையெழுத்திட்டது பாராட்டுக்குரியது. கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த முதல்வர் விஜய்யிடம் இந்து மதத்திற்கு மாற வேண்டும் என்று கேட்கப்படவில்லை. மீனாட்சியம்மன் மீது மரியாதை இருப்பதை உறுதிப்படுத்துமாறு உறுதிமொழி படிவத்தில் எழுத மட்டுமே கேட்டுக்கொள்ளப்பட்டது. இதைத்தான் ”அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை” என்று கூறுகிறோம்.

(We take judicial notice of the fact that a Hon’ble Minister who is a Christian by faith, entered Thiruchendur temple without giving the undertaking required from Non-Hindus. We have the illustrious instance of the Hon’ble Chief Minister of Tamil Nadu Shri Joseph Vijay who worshipped Goddess Meenakshi after signing the undertaking. The Hon’ble Chief Minister who is a Christian by faith was not asked to convert to Hinduism. He was only requested to affirm his reverence for the deity. This is what we call as an inclusive approach.)

மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ குறித்து நீதிபதிகள் சொன்னது என்ன?

மதுரை மீனாட்சியம்மன் கோயில் அமைந்துள்ள மதுரை மத்தியத் தொகுதியின் எம்எல்ஏ பத்ருதீன் முஸ்தபா, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கோயிலுக்குள் சென்றுள்ளார். கோயிலில் உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதை ஆய்வு செய்யத் தனக்கு உரிமை இருப்பதாகக் கூறியுள்ளார். கும்பாபிஷேகத்தின்போது கோயில் கோபுரங்களின் மீதும் ஏறியுள்ளார். சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறிய அதே எம்எல்ஏ இவ்வாறு செயல்பட்டிருப்பது முரண்பாடாக உள்ளது.

(Mr.Badrudeen Mustafa, an MLA representing the Madurai Central Constituency where the famed Meenakshi temple is located, went inside the temple premises soon after his election. He claimed that he had a right to inspect if proper amenities are being provided. He also went up the temple towers on the occasion of Kumbabishekam. It is ironical that the said MLA proclaimed that Sanatana Dharma ought to eradicated.)

அரசியலில் ‘ஜால்ரா’ கலாசாரம்

ஜால்ரா அடிக்கும் கலாசாரம் நமது அரசியல் பண்பாட்டில் பரவலாகக் காணப்படுகிறது. கட்சித் தொண்டர்கள் தங்களது தலைவர்களுக்குப் பணிவைக் காட்டுவதற்காக அவர்களைச் சுற்றியே இருக்கின்றனர். தலைவர்கள் எங்கு சென்றாலும் அவர்களைப் பின்தொடர்கின்றனர். அப்படி செல்கிற இடமும் சூழ்நிலையும் அதற்கு ஏற்றதா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.

ஒரு எம்எல்ஏவோ, அமைச்சரோ தங்கள் பகுதியிலுள்ள கோயிலுக்கு வருகிறார் என்று தெரிந்தால், கட்சித் தொண்டர்களும் உற்சாகத்தில் அவரைப் பின்தொடர்ந்து கோயிலுக்குள் நுழைய முயல்கின்றனர். தங்களுக்கு அங்கு நுழைய அனுமதி இருக்கிறதா என்பதைக்கூட அவர்கள் பொருட்படுத்துவதில்லை.

(‘Chamchagiri’ is endemic to our political culture. The party workers as a mark of sycophancy hang around their leader. They tend to make a bee-line for him. Whether the occasion is appropriate is beside the point.)

கோயில் மரபுகள் ‘ஜால்ரா’வுக்கு தலைவணங்காது

ஜனநாயகத்தில் அரசியல் தலைவர்களுக்கு ஜால்ரா அடிப்பது மட்டுமல்ல, மக்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட இமேஜை உருவாக்குவதும் முக்கியமானதாக இருக்கிறது. இந்து மதம் அல்லாத வேறொரு மதத்தைச் சேர்ந்த, அந்த மதத்தின் அடிப்படைவாதக் கொள்கைகளில் தீவிரப் பற்றுள்ள அரசியல் தலைவர் ஒருவரை நமக்குத் தெரியும். ஆனால், அவர் கோயில்களுக்குச் செல்வதையும், நெற்றியில் இந்து மத அடையாளத்தை அனைவருக்கும் தெரியும்படி அணிந்துகொள்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். மக்களைக் கவர்வதற்காகவே அவர் இவ்வாறு செய்கிறார். அப்படிச் செய்வதன் மூலம் வாக்குகளைப் பெற முடியும் என்பதும் வெளிப்படையானது. அரசியல் தலைவர்களுக்காக ஜால்ரா அடிப்பதும், மக்கள் மத்தியில் விளம்பரத்துக்காக இமேஜை ஏற்படுத்துவதும் கோயில்களின் பழக்கவழக்கங்களையும் மரபுகளையும் தலைவணங்கச் செய்ய முடியாது.

(Not only Chamchagiri but also optics matters in a democracy. We know of one political leader, who is a fundamentalist subscribing to a non-Hindu faith. But he would make it a point to visit the temple and also prominently display the religious mark on his forehead. This was to play to the gallery. The vote value of such a display, is obvious. …… We hold that usages and customs of temple cannot kneel down before such display of Chamchagiri and optics.)

திருவண்ணாமலை கோயிலில் நடந்தது என்ன?

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், பக்தர்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, ”குல்லா” அணிந்த சிலர் கோயிலுக்குள் நுழைவதைக் காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துள்ளது. அப்போது இந்து சமய அறநிலையத் துறை ஊழியர்கள் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.

(We take judicial notice of a video doing rounds in the social media of persons wearing skull caps, pushing their way through in Thiruvannamali Arunachaleswarar temple, notwithstanding the vigorous protests of the devotees. The HR&CE staff stood as mute spectators.)

சாதியின் பெயரில் கோயில் நுழைவைத் தடுக்க முடியுமா?

கடந்த காலங்களில் சில இந்து சமூகத்தினர் கோயிலின் கொடிமரத்தைத் தாண்டிச் செல்லக்கூடாது என்ற ஆகமக் கட்டுப்பாடுகள் இருந்தன.
ஆனால், இத்தகைய கட்டுப்பாடுகள் தற்போது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் செல்லுபடியாகாது.

அரசியலமைப்புச் சட்டமே அனைத்திற்கும் மேலானது. எனவே, பிற்போக்குத்தனமான மதக் கட்டுப்பாடுகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு வழிவிட வேண்டும். அதே நேரத்தில், உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திடாத இந்துக்கள் அல்லாதவர்களுக்கு ஆகமக் கோயில் நுழைவுக் கட்டுப்பாடுகள் பொருந்தும்.

(Certain classes of Hindus were not even permitted to cross the flag-pole. But such Agamic injunctions can no longer pass muster. Constitution ranks paramount and such regressive theological injunctions have to necessarily give way. But we hasten to add that those injunctions will hold good in respect of non-Hindus who do not sign the undertaking.)

ஐயப்பன், ஷீரடி சாய்பாபா கோயில்களுக்கும் பொருந்துமா?

இந்தத் தீர்ப்பு ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதைத் தொடக்கத்திலேயே தெளிவுபடுத்தியுள்ளோம். ஐயப்பனைப் பல்வேறு மதங்களைச் சேர்ந்த பக்தர்களும் வழிபடுகின்றனர். ஷீரடி சாய்பாபாவும் மதங்களைக் கடந்தவர். இந்துக்களும் முஸ்லிம்களும் அவரைத் தங்களுக்குரியவராகக் கருதினர்.

(We made it clear at the very outset that the scope of this judgment is confined to Agamic temples. Lord Ayyapa has devotees cutting across religions. Shirdi Sai Baba is also beyond religion. Both Hindus as well as Muslims claimed him as their own.)

மசூதி, தேவாலயம் முன்பு ஊர்வலம் நடத்தலாமா?

மசூதிகளும் தேவாலயங்களும் அமைந்துள்ளன என்பதைக் காரணமாகக் காட்டி, பிற மதத்தினர் தங்களது வழக்கமான ஊர்வலங்களை நடத்தும் உரிமையைக் கட்டுப்படுத்த முடியாது. அதேபோல, கோயில்களுக்கு முன்பாக மற்ற மதத்தினர் வழக்கமான முறையில் ஊர்வலமாகச் செல்வதையும் இந்துக்கள் தடுக்க முடியாது.

(The right of the other communities and religionists to take their processions cannot be curtailed by citing the situs of mosques and churches. Likewise, Hindus also cannot prevent the other religionists from taking their processions in the customary manner on the ground that they pass in front of temples.)

கருவறைக்குள் யார் நுழைய முடியும்?

வடஇந்தியாவில் காசி போன்ற கோயில்களில் இந்து பக்தர்கள் சிவலிங்கத்தைத் தொட்டு நேரடியாக அபிஷேகம் செய்யலாம். ஆனால், தமிழகத்தில் ஆகம விதிகளின்படி செயல்படும் கோயில்களின் கருவறைகளுக்குள் சிவாச்சாரியார்கள், தீட்சிதர்கள், பட்டர்கள் அல்லது பூசாரிப் பணிகளை மேற்கொள்பவர்கள் தவிர மற்றவர்கள் நுழைய முடியாது.

ஒருவர் பிராமணராக இருந்தாலும் கருவறையின் நுழைவாயிலில்தான் நிற்க வேண்டும். இந்த விஷயத்தில் அனைத்துச் சமூகத்தினரும் ஒரே நிலையில் உள்ளனர்.

(The sanctum sanctorum of Agamic temples is beyond the bounds of all Hindus except the Shivacharyas / Dhikshidhars / Bhattars or those who discharge priestly roles. One may be a Brahmin but he also has to stop at the entrance of the ‘Garbhagriha’.)

கோயில் மரபுகளைப் பாதுகாக்க வேண்டியது யார் கடமை?

கோயில்களின் மரபுகளையும் பழக்கவழக்கங்களையும் பாதுகாக்க வேண்டியது அறங்காவலர்களின் கடமையாகும். கடந்த கால நீதிமன்றத் தீர்ப்புகளும் இந்தக் கடமையை வலியுறுத்தியுள்ளன. அந்தத் தீர்ப்புகளை தற்போதைய அரசியலமைப்புச் சட்டத்தின் பின்னணியில் புரிந்துகொண்டு செயல்படுத்த வேண்டும். குறிப்பாக, இந்துக்கள் அல்லாதவர்கள் ஆகமக் கோயில்களுக்குள் நுழைவது தொடர்பான கட்டுப்பாடுகளுக்கே அந்த முந்தைய தீர்ப்புகளின் அம்சங்கள் பொருந்தும்.

(The above Privy Council decision is relevant since it cast a duty on the trustees to ensure that the usages and customs of the temple are maintained. In other words, they are bound to prevent the entry of persons whose very presence will defile the sanctity of the temple. Of course, those decisions rendered in the context of an altogether different clime should be understood and applied in the background of our Constitution. In other words, those decisions should be held applicable in respect of non-Hindus.)

உயர்நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு என்ன?

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறைச் சட்டத்தின் 24(4)-வது பிரிவு, இந்துக்கள் அல்லாதவர்கள் குறிப்பிட்ட கோயில் பகுதிகளுக்குள் நுழைய அனுமதி அளிப்பதாகக் கருத முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஆகமக் கோயில்களில், சம்பந்தப்பட்ட தெய்வத்தின் மீது மரியாதை இருப்பதாக உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திடாத இந்துக்கள் அல்லாதவர்களைக் கொடிமரத்தைத் தாண்டி அனுமதிக்கக்கூடாது. மேலும், தங்களது மத அடையாளங்களை அணிந்துகொண்டு, அந்தத் தெய்வத்தின் மீது மரியாதை இருப்பதாக உறுதிய மொழி படிவத்தில் கையெழுத்திடாத இந்துக்கள் அல்லாதவர்களைக் கோயில் வளாகத்திற்குள்ளும் அனுமதிக்க முடியாது. இந்த உறுதிமொழி கோயில் நிர்வாகம் நிர்ணயித்துள்ள படிவத்தில் அளிக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

தீர்ப்பு முழு விவரம்:

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share