தேனி சிறையில் இருந்து தப்பி வனப்பகுதியில் பதுங்கியிருந்த 8 கைதிகளை டிரோன் கேமரா மூலம் கண்டுபிடித்து போலீசார் சுற்றிவளைத்துப் பிடித்துள்ளனர்.
தேக்கம்பட்டி மாவட்டச் சிறையில் இருந்து நேற்று (அக்.26) இரவு 17 கைதிகள் தப்பிச் சென்றனர். சிறையில் இருந்த காவலர்களைத் தாக்கி, சாவிகளைப் பறித்துக்கொண்டு அவர்கள் தப்பியதாகச் சிறைத்துறை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தேனி மாவட்ட வனப்பகுதியில் பதுங்கியிருந்த மேலும் 8 கைதிகளை டிரோன் கேமரா கண்காணிப்பு மூலம் கண்டுபிடித்துப் பிடித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு காவல்துறையின் தென்மண்டல அதிகாரப்பூர்வ X பக்கத்தில் இன்று (அக்.27), “தேனி மாவட்டத்தில் தப்பி ஓடிய கைதிகளை ட்ரோன் கண்காணிப்பை பயன்படுத்தி விரைவாக கண்டறிந்து பிடித்த காவல்துறையினர்” என்று பதிவிட்டு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் டிரோன் கண்காணிப்பு மூலம் கைதிகளைத் தேடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
