எண்ணூரில் ஆக்ரோஷமாக எழுந்த கடல் அலைகள் – சாலை வரை பாய்ந்த நீர் – அதிர்ச்சி வீடியோ!

Published On:

| By Kavi

சென்னை எண்ணூரில் கடல் சீற்றம் காரணமாக அலைகள் பாதுகாப்பு தடுப்பையும் தாண்டி சாலைக்கு வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய அர்னாப் புயல் ஆந்திராவில் தற்போது கரையை கடக்க தொடங்கியுள்ளது. 

ADVERTISEMENT

புயல் காரணமாக இன்று காலை முதலே சென்னை மாமல்லபுரம் ஆகிய பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டது. 

இந்த நிலையில் தற்போது வடசென்னை எண்ணூர் பாரதியார் நகர் கடற்கரை பகுதியில் கடல் அலைகள் கடும் சீற்றமாக காணப்படுகின்றன. 

ADVERTISEMENT

பாதுகாப்பு தடுப்பை தாண்டி ஆக்ரோஷமாக எழுந்த கடல் அலையில் ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் எல்லாம் சிறிது தொலைவுக்கு அடித்துச் செல்லப்பட்டன. 

இது தொடர்பான அதிர்ச்சியூட்டும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது

ADVERTISEMENT

அர்னாப் புயல் காரணமாகவே கடல் கடும் சீற்றமாக காணப்படுவதாக கூறப்படுகிறது. 

எனினும் ஆபத்தை உணராமல் பட்டினப்பாக்கம் பகுதியில் பொதுமக்கள் கடல் அருகே சென்று சீற்றத்தை வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

இதுகுறித்து பட்டினப்பாக்கம் பகுதி மீனவர்கள் கூறுகையில்,  மாலை 6 மணியிலிருந்து கடல் கடும் சீற்றமாக காணப்படுகிறது. 7 மணி அளவில் எல்லாம் வேகம் இன்னும் அதிகமாக இருந்தது. தற்போது ரோடு வரைக்கும் தண்ணீர் வருகிறது. 

ஆனாலும் ஆபத்தை உணராமல் மக்கள் இங்கு வந்து நின்று கொண்டிருக்கின்றனர். இரண்டு பேர் அலையில் விழுந்து விட்டனர். 

நாங்கள் எங்களுடைய படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தி சென்று கொண்டிருக்கிறோம்” என்று கூறுகிறார்கள்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share