நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பாமக, விசிக, தேமுதிக உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
திமுக தரப்பில் கூட்டத்தில் பங்கேற்ற ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் பேசிய போது “வாக்காளர் பட்டியல் திருத்தம் தெளிவாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினோம். தேர்தல் பணியாளர்களாக 50 சதவிகிதத்திற்கும் மேலாக பெண்கள் தான் செல்கிறார்கள். அவர்களுக்கு முறையான அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில்லை. அதனால் வாக்குச்சாவடி மையத்தில் சில சிக்கல்கள் ஏற்படுகிறது. அதனால் பெண்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினோம்” என்றார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் இடம்பெற செய்ய தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். பல மாவட்டங்களில் இறந்தவர்கள் பெயரை நீக்கவில்லை. 100 சதவிகிதம் வாக்காளர் பட்டியல் குளறுபடி இல்லாமல் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என வலிறுத்தியுள்ளோம்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சசிகுமார் படத்தை இயக்கும் வேல்ராஜ்
சங்கரய்யா தமிழகத்தின் சொத்து: அண்ணாமலை
