ஜெகதீப் தன்கர் இதை தெரிஞ்சுக்கணும்… திருச்சி சிவா காட்டம்!

Published On:

| By Minnambalam

Jagdeep Dhankhar comment are unethical

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுப்பது தொடர்பாக சமீபத்தில் உச்சநீதிமன்றம், குடியரசு தலைவருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது குறித்து துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் நேற்று (ஏப்ரல் 17) கடுமையாக விமர்சித்திருந்தார். Jagdeep Dhankhar comment are unethical

”நீதிபதிகள் சூப்பர் பார்லிமென்ட்டாக செயல்படுகிறார்கள். எந்த அடிப்படையிலும் ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு போட முடியாது. அரசியலமைப்பின் அதிகாரத்தை நீதிபதிகள் மறந்துவிட்டனர்” என்று ஜெகதீப் தன்கர் தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

இந்தநிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்த துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கரின் கருத்துகள் நெறிமுறையற்றவை என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும் மாநிலங்களவை குழு தலைவருமான திருச்சி சிவா குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக திருச்சி சிவா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,

ADVERTISEMENT

“அரசியலமைப்பின் படி அதிகாரங்கள் பிரிக்கப்பட்டதன் கீழ், நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவை தனித்தனி அதிகாரங்களைக் கொண்டுள்ளன. இவை மூன்றும் அவற்றின் தனித்த அடையாளங்களில் செயல்படும்போது அரசியலமைப்பு உயர்ந்தது என்பதை ஒருவரும் மறந்துவிடக் கூடாது. Jagdeep Dhankhar comment are unethical

பிரிவு 142-ல் ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதியின் பங்கு குறித்த சமீபத்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, அரசியலமைப்பு அதிகாரம் என்ற பெயரில் எந்தவொரு தனிநபரும் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை காலவரையின்றி குறைத்து மதிப்பிட முடியாது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவியுள்ளது.

ADVERTISEMENT

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்த துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கரின் கருத்துகள் நெறிமுறையற்றவை. இந்திய ஒன்றியத்தில் சட்டத்தின் ஆட்சி நிலவுகிறது என்பதை ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share