சூப்பர் பார்லிமென்ட்டாக செயல்படும் நீதிபதிகள்… கொந்தளித்த ஜெகதீப் தன்கர்

Published On:

| By Selvam

நீதிபதிகள் சூப்பர் பார்லிமென்ட்டாக செயல்படுகிறார்கள் என்று துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று (ஏப்ரல் 17) குற்றம்சாட்டியுள்ளார். Jagdeep Dhankhar criticises Supreme Court

டெல்லியில் இன்று நடைபெற்ற ராஜ்யசபா Interns தொடக்க விழா நிகழ்ச்சியில் துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் பேசும்போது, “சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுப்பது தொடர்பாக சமீபத்தில் உச்சநீதிமன்றம், குடியரசு தலைவருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்? நாட்டில் என்ன நடக்கிறது?

நீதிபதிகள் சூப்பர் பார்லிமென்ட்டாக செயல்படுகிறார்கள். ஏனென்றால், சட்டம் அவர்களுக்கு மட்டும் பொருந்தாது. எந்த அடிப்படையிலும் ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு போட முடியாது.

அரசியலமைப்பின் கீழ் நீதிபதிகளுக்கு உள்ள ஒரே உரிமை, பிரிவு 145(3) இன் கீழ் அரசியலமைப்பை விளக்குவது மட்டுமே. குடியரசுத் தலைவருக்கு உத்தரவு பிறப்பித்து, அது நாட்டின் சட்டமாக மாறும் என்ற சூழ்நிலையை முன்வைத்த நீதிபதிகள், அரசியலமைப்பின் அதிகாரத்தை மறந்துவிட்டனர். எனவே, பிரிவு 145(3) இன் விதிகளைத் திருத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல, உச்சநீதிமன்றத்திற்கு தனி அதிகாரம் அளிக்கும் பிரிவு 142 ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணையாக மாறியுள்ளது. மார்ச் 15-ஆம் தேதி இரவு டெல்லியில் நீதிபதியின் இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டது. ஏழு நாட்களுக்கு அந்த சம்பவம் பற்றி யாருக்கும் தெரியாது. இந்த தாமதம் மன்னிக்கத்தக்கதா? விளக்கத்தக்கதா?” என்று கேள்வி எழுப்பினார். Jagdeep Dhankhar criticises Supreme Court

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share