புதுச்சேரியில் தேமுதிக தனித்து போட்டி?

By Balaji

|

Published on 19 Apr 2016, 12:00 AM

Wதேமுதிக,தமாகா, மக்கள் நலக் கூட்டணி புதுச்சேரியில் தொகுதி பங்கீடு செய்தனர் சிபிஐ 8, சிபிஐ(எம்) 4, விசிக 7, மதிமுக 4, தேமுதிக 4, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சிக்கு 1, மீதமுள்ள இரண்டு தொகுதியான மாஹி,யானம், தொகுதியில் சுயேட்சயாக போட்டியிடுபவர்களுக்கு ஆதரவு கொடுப்பது என முடிவு செய்தனர். தேமுதிக மாநில அமைப்பாளர் செல்வம் என்கிற செல்வராஜ் விசிக-வைவிட ஒரு தொகுதியாவது அதிகமாக வேண்டும் என்று வெளியேறினார் என்றும், கூட்டணி கட்சியினர் இரண்டு தொகுதிகள் கூடுதலாக தறுவதாக பேசியதற்கு சிபிஐ போட்டியிடக்கூடிய முதலியார்பேட்டை, உழவர்கரை தொகுதியை கேட்டு தேமுதிக முரண்டு பிடிக்கிறது என்ற செய்தியையும், நமது மின்னம்பலம்.காம் இணைய இதழில் தொடர்ந்து வெளியிட்டுவந்தோம்.இந்நிலையில், இன்று தேமுதிக அமைப்பாளர் செல்வராஜ் 7 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் தயார்செய்து வைத்துவிட்டு தனித்து போட்டியிடப்போவதாக தன்னை சந்தித்த நிருபர்களிடம் பேசியுள்ளார். அந்த ஏழு தொகுதிகளில் சிபிஐ தொகுதிகளும், விசிக,தொகுதிகளும் அடங்கியுள்ளதாம். இதனால் புதுச்சேரி தேமுதிக-தமாக-மக்கள் நலக் கூட்டணியில் தீராத குழப்பம் நீடிக்கிறது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel