திமுக-வில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே சில தொகுதிகளில் வேட்பாளர்களை மாற்ற வேண்டும் என்ற போராட்டம் நடந்துவருகிறது. உச்சபச்சமாக பாளையங்கோட்டை வேட்பாளரை மாற்ற வேண்டும் என கருணாநிதி வீட்டு வாசலிலேயே நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மாற்றுவதாக திமுக அறிவித்துள்ளது. ஒரத்தநாடு தொகுதி வேட்பாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தின் தம்பி, எஸ்.எஸ்.ராஜ்குமார் அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால், தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட விரும்பியே விருப்பமனு அளித்ததாகவும், ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட விருப்பம் இல்லை என்று கட்சித் தலைமைக்கு ராஜ்குமார் தெரிவித்துவிட்டார். இதனால் ஒரத்தநாடு தொகுதி வேட்பாளராக ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அரக்கோணம் தனித்தொகுதி வேட்பாளராக எஸ்.பவானி அறிவிக்கப்பட்டிருந்தார். தற்போது பவானிக்கு பதிலாக என்.ராஜ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.









