அன்பில் மகேஷும் என் மகன் தான் – ஸ்டாலின்

By Balaji

|

Published on 18 Apr 2016, 12:00 AM

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் கே.என்.நேருவை ஆதரித்து திருச்சி உறையூர் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது, திருச்சி மாநகராட்சியால் கடந்த 5 ஆண்டுகளில் எந்த திட்டத்தையும் உருப்படியாய் செய்து முடிக்க முடியவில்லை. அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. நான் 5 ஆண்டுகள் சென்னை மாநகராட்சி மேயராக இருந்துள்ளேன். இந்த மாநிலத்தின் துணை முதலமைச்சராக இருந்துள்ளேன். ஆகவே, நீங்கள் என்னை நம்புங்கள், திமுக ஆட்சிக்கு வந்த உடனே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எல்லாமே செயல்படுத்தப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன். ராமஜெயம் இறந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டது.அவர் மரணத்துக்கு யார் காரணம் என்று இதுவரை இந்த அரசாங்கம் கண்டுபிடிக்கவில்லை. இதற்கு மேல் இந்த விவகாரத்தில் நான் பேச விரும்பவில்லை. ராமஜெயம் பற்றி பேசினால், நேரு உணர்ச்சிவசப்பட்டுவிடுவார். நேரு அமைச்சராக இருந்தபோது எப்படி செயல்பட்டார் என்று உங்களுக்குத் தெரியும். எனவே, அவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். கலைஞரை 6வது முறையாக முதல்வராக்க உறுதியேற்றுக்கொள்ளுங்கள்” என்றார். அதன்பிறகு திருவெறும்பூர் பகுதியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து பிரச்சாரம் செய்த ஸ்டாலின், “அன்பில் தர்மலிங்கம் எப்படி கலைஞருக்கு உறுதுணையாக இருந்தாரோ, அதேபோல் அன்பில் பொய்யாமொழி எனக்கு உறுதுணையாக இருந்தார். இப்போது அந்த வரிசையில் அன்பில் மகேஷை உங்களின் வேட்பாளராக கலைஞர் தந்துள்ளார். மகேஷ், பொய்யாமொழிக்கு மட்டும் மகனல்ல. எனக்கும் மகன் தான். என்னைப் பார்க்கும்போதெல்லாம் பெரியப்பா என்று அழைக்கும் அவன் எனக்கும் மகன் தான். மகேஷ் பொய்யாமொழிக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள்” என்றார்.,”

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel