பிரதமர் மோடி ஜூலை 27-ல் தமிழகம் வருகை?

Published On:

| By Mathi

PM Narendra Modi

பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 27-ந் தேதி தமிழ்நாடு வருகை தர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Modi Tamil Nadu

சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைப்பது வழக்கம்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெறும் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஆடித்திருவாதிரை நட்சத்திர நாளான ஜூலை 27-ந் தேதி ராஜேந்திர சோழன் பிறந்த நாள். கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலை கட்டியவர். தமிழ்நாடு அரசு சார்பில், ராஜேந்திர சோழன் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்த ஆண்டு அரியலூரில் நடைபெறும் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கக் கூடும் என்கின்றன தகவல்கள்.

அரியலூர் கங்கை கொண்ட சோழபுரத்தில் டெல்லியில் இருந்து வந்த பிரதமர் அலுவலக அதிகாரிகள் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தததாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share