பியூட்டி டிப்ஸ்: கண்ணாடி சருமம் (Glass skin) எல்லோருக்கும் சாத்தியமா?

Published On:

| By christopher

Is glass skin possible for everyone?

சமூக ஊடகங்களில் கிளாஸ் ஸ்கின் (Glass skin) என்ற கண்ணாடி போல பளபளக்கும் சருமத்துக்கான கொரியன் அழகுக் குறிப்புகள் தொடர்பான வீடியோக்களை பார்க்கிறோம். உண்மையிலேயே கண்ணாடி போன்ற சருமம் பெறுவது எல்லோருக்கும் சாத்தியமா?

“கொரியன் அழகு சிகிச்சைகளில் சருமத்தின் இறந்த செல்களை நீக்கும் எக்ஸ்ஃபோலியேஷன் செய்வார்கள். பிறகு அதிகபட்ச மாய்ஸ்ச்சரைசர் உபயோகித்து, சருமத் துவாரங்களே தெரியாமல் செய்வார்கள்.

ADVERTISEMENT

இதனால் சருமம் இளமையாகவும், பளபளவென்றும் காட்சியளிக்கும். இதையே கிளாஸ் ஸ்கின் என்கிறோம்.

இந்த ஒட்டுமொத்த சிகிச்சையில் நிறைய மாய்ஸ்ச்சரைசர், ஷீட் மாஸ்க், சீரம், ஃபேஸ்பேக் என கிட்டத்தட்ட 10 ஸ்டெப்ஸ் பின்பற்றப்படும். அத்தனையும் சேர்ந்து கண்ணாடி போன்ற சருமத்தைப் பெற வைக்கும். சருமத் துவாரமே வெளியில் தெரியாது.

ADVERTISEMENT

அவர்களுக்கு இது எப்படி சாத்தியமாகிறது என்ற கேள்வி எழலாம். அவர்கள் உபயோகிக்கும் மாய்ஸ்ச்சரைசரில் லனோலின் (Lanolin) என்பது இருக்கும். அது அதீத நீர்ச்சத்தைக் கொடுக்கும்.

நம்மூர் தட்பவெப்ப நிலைக்கும் நம் சருமத்தின் தன்மைக்கும் அது பலருக்கும் ஏற்றுக்கொள்வதில்லை. அதனால் சிலருக்கு பருக்கள் வரலாம்.

ADVERTISEMENT

தவிர சருமத்தை தினமும் எக்ஸ்ஃபோலியேட் செய்வது சரியானதல்ல. அதனால் உடனே சருமத்தில் வெயிலால் ஏற்படும் பாதிப்பு, பங்கு எனப்படும் நிற மாற்றம் வர வாய்ப்பு உண்டு.

எனவே நம்மூர் சீதோஷ்ண நிலைக்கேற்ற மாய்ஸ்ச்சரைசர் (Water based) உபயோகிக்கலாம். தினமும் எக்ஸ்ஃபோலியேட் செய்வதற்கு பதில் வாரத்துக்கு ஒருமுறை மைல்டாகவும் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை கொஞ்சம் ஸ்ட்ராங் ஆகவும் செய்யலாம்.

மைக்ரோநீடிலிங் போன்ற கருவியைப் பயன்படுத்துவதன் மூலம் சருமத் துவாரங்கள் டைட் ஆகும். சரும மருத்துவரின் ஆலோசனையோடு வைட்டமின் ஏ க்ரீம் பயன்படுத்துவதும் பலன் தரும்.

எதையுமே உங்கள் சருமத்துக்குப் பொருந்துமா என பார்த்து உபயோகிப்பதுதான் சரியானது” என்கிறார்கள்  நம்மூர் சருமநல மருத்துவர்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சண்டே ஸ்பெஷல்: வீக் எண்டில் விருந்து… அடுத்த நாள் பட்டினி… இந்தப் பழக்கம் சரியா?

ஒரு கால்குலேட்டர் என்ன விலை வரும்?: அப்டேட் குமாரு

பணம் வாங்கியதை ஒப்புக்கொண்டாரா? ED அதிகாரி அங்கித் திவாரியின் வாக்குமூலம்!

தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

Photo of author
christopher
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share