மும்பை இந்தியன்ஸோட கேப்டன மாத்துனதால மொத்த பேன்ஸூம் ரொம்ப உக்கிரமா சமூக வலைதளங்கள்ல களமாடிட்டு இருக்காங்க.
அதிலயும் சில மொரட்டு பேன்ஸ் எல்லாம் டீஷர்ட், தொப்பிய எரிச்சு வீடியோ எடுத்து மும்பை ஓனரையே மெரட்டுற அளவுக்கு போய்ட்டாங்க.
இத்தனை நாளா ஒரே பேமிலின்னு ஆனந்தமா சுத்திட்டு இருந்த மும்பை அணிக்கு இப்போ எல்லா பக்கமும் இருந்து கண்டனங்கள் குவியுது. வெளிநாடுகள்ல இருந்து கூட நெறைய பேரு அட்வைஸ் பண்றாங்கன்னா பாத்துக்கங்களேன்.
இத்தனை களேபரங்களுக்கு நடுவுலயும் ‘ஈ சாலா கப் நம்தே’ன்னு வருஷா வருஷம் சபதம் எடுக்குற பெங்களூர் டீமோட ரசிகர்கள் எண்ணிக்கை திடீர்னு அதிகமாகிருக்காம்.
இதை கேட்டதும் அப்படியே அந்த கால்குலேட்டர் என்ன விலைன்னு? கொஞ்சம் கேட்டு வச்சுக்கங்கப்பான்னு மனசுக்குள்ள நெனைச்சுக்கிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
மும்பைக்கு ஒரு பக்கம் கடல்னா இன்னொரு பக்கம் ரோஹித்
அந்த கடல தூக்கிட்டு ஹர்திக் பாண்டியானு மாத்துங்கடா!
little princess cooking channel – நூடுல்ஸ் செய்ய தேவையான பொருள்கள்..
நூடுல்ஸ் பாக்கெட் ஒண்ணு.. தண்ணி ரெண்டு கப்..!
என்னப்பா வீரப்பனார் நினைவேந்தல் முடிஞ்சுதா..அடுத்து ஆட்டோ சங்கர்தானே?!!
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
இப்பெல்லாம் ரெஸ்டரன்ட்ஸை விட கல்யாணம் காதுகுத்து விஷேசங்கள்ல போடற சாப்பாடு மெனு ரொம்ப தடபுடலா இருக்கு.. பேசாம ஒரு ஆளுக்கு சாப்பிட இவ்வளவுன்னு மண்டப வாசல்ல போர்டு வைச்சு வெளியாட்களையும் சாப்பிட விட்டு நல்லா கல்லா கட்டலாம்.. ஐடியா இல்லாத கல்யாண வீட்டுக்காரங்க..!
DESPOTER
ஒரு முறை தான் சந்திச்ச… உன்னால முடிஞ்சது பண்ணிட்ட… T20 வேர்ல்ட் கப்ல எடுக்கல franchise டீம்ல இருந்து கூட துரத்தி விடுரானுங்க….!
கணவன் மனைவியிடம் வாங்கிக்கட்டிக் கொண்டால் அது சண்டை என்றும், மனைவி கணவனிடம் வாங்கிக்கட்டிக் கொண்டால் அது புடவை என்றும் சொல்கிறார்கள்!
5 கப் அடிச்சவனையும் தொரத்துறானுக… ஒரு கப் கூட அடிக்காதவனையும் தொரத்துறானுக ஆனா இன்னொரு பக்கம் எல்லாத்தையும் விட்டுட்டு விவசாயம் பாத்துட்டு இருக்க ஒரு விவசாயிய நீங்க தான் வேணும்னு கொண்டாடுறானுக யுகத்திற்கான தலைவன்!
கிரிக்கெட் கடவுள் ~
இந்த captaincy தகராறுல Arjun playing XI-ல ஆடுறதுக்கு ஒன்னும் பாதிப்பு இல்லையே!
உங்க ஒன் பேமிலிய இப்பிடி உடைஞ்ச பேமிலியா பார்க்குறதுக்கே ரொம்ப கஷ்டமாகீது இன்னா பன்றது உங்க டைம் அப்பிடிருக்கு!
-லாக் ஆஃப்