திஷா மிட்டல் உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

Published On:

| By Kavi

தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்ததில் இருந்து தொடர்ச்சியாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

அந்தவகையில் இன்று 7 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதில்,

ADVERTISEMENT

”தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகத்தின் போக்குவரத்து மற்றும் தலைமையக கூடுதல் ஆணையர் கபில் குமார் சி. சரத்கர் மதுரை மாநகர் ஆணையராகவும், 

மதுரை மாநகர காவல் ஆணையர் அபிஷேக் தீக்சித், சென்னை, ரயில்வே ஐஜியாகவும், 

ADVERTISEMENT

காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜே. லோகநாதன் சென்னை தொழில்நுட்ப பிரிவு ஐஜியாகவும், 

காத்திருப்போர் பட்டியலில் இருந்த திருநாவுக்கரசு,  நெல்லை சரக டிஐஜியாகவும், 

காத்திருப்போர் பட்டியலில் இருந்த பகலவன் சென்னை மாநகர காவல், போக்குவரத்து தெற்கு இணை ஆணையராகவும்

சென்னை மாநகர காவல், போக்குவரத்து வடக்கு இணை ஆணையர் திஷா மிட்டல்,  சென்னை மாநகர காவல், சட்டம் ஒழுங்கு (மேற்கு) இணை ஆணையராகவும்

சென்னை மாநகர காவல், சட்டம் ஒழுங்கு (கிழக்கு) இணை ஆணையர் பண்டி கங்காதர் டிஎன்பிஎல் தலைமை கண்காணிப்பு அதிகாரியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share