இஸ்ரேல் பெண் பாலியல் பலாத்காரம் : ஆண் நண்பர் கால்வாயில் தள்ளி கொலை

Published On:

| By Kumaresan M

ஹம்பியில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்து. உடன் இருந்த ஆண் நண்பர் கால்வாயில் தள்ளி கொலை செய்யப்பட்டுள்ளார்.Israeli woman raped in Karnataka

கர்நாடக மாநிலம் கொப்பால் மாவட்டம் ஹம்பியில் கடந்த வியாழக்கிழமை (மார்ச் 6)இரவு 10.30 மணியளவில் துங்கப்பத்திரா நதி அருகே இஸ்ரேலை சேர்ந்த ஒரு பெண் அமெரிக்காவை சேர்ந்த டேனியல் பிடாஸ் இந்தியாவை சேர்ந்த பங்கஜ் பாட்டீல், பிபாஷ் மற்றும் ஒரு பெண் வழிகாட்டி ஆகிய 5 பேர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர். கிட்டார் வாசித்துக் கொண்டு இரவு நேரத்தை ரசித்து கொண்டிருந்துள்ளனர்.

அப்போது, 20 முதல் 25 வயது கொண்ட மூன்று இளைஞர்கள் அங்கு வந்துள்ளனர். அந்த இளைஞர்கள் அங்கிருந்த ஆண்கள் அனைவரையும் துங்கப்பத்திரா கால்வாயில் தள்ளி விட்டுள்ளனர். பின்னர், இஸ்ரேலிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கால்வாயில் தள்ளி விட்டதில் அமெரிக்கரான டேனியல் பிடாஸ் தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக , டுரீஸ்ட் வழிகாட்டி பெண் கங்காவதி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.Israeli woman raped in Karnataka

இது குறித்து கொப்பால் மாவட்ட எஸ்.பி. அரசித்தி கூறுகையில், ‘கால்வாயில் தள்ளி விடப்பட்டதில் தண்ணீரில் மூழ்கி டேனியல் பிடாஸ் பலியாகியுள்ளார். அவரின், உடல் இன்னும் கிடைக்கவில்லை. மற்றவர்கள் நீந்தி கரை சேர்ந்துள்ளனர்.சுற்றுலாப்பயணிகளிடத்தில் இருந்து 2 செல்போன்கள் மற்றும் 9,500 பணத்தையும் பறித்து சென்றுள்ளனர். உள்ளுரை சேர்ந்தவர்கள்தான் இந்த காரியத்தை செய்திருப்பார்கள் என்று சந்தேகிக்கிறோம் ‘என்று தெரிவித்துள்ளார்.Israeli woman raped in Karnataka

பாலியல் வன்கொடுமை, கொலை, வழிப்பறி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share